தசைநார் பிடிப்பால் கை விரல்களில் உண்டாகும் வலிகளைப் போக்க இந்த பயிற்சிகள் உதவும்…

 
Published : Oct 02, 2017, 01:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
தசைநார் பிடிப்பால் கை விரல்களில் உண்டாகும் வலிகளைப் போக்க இந்த பயிற்சிகள் உதவும்…

சுருக்கம்

Some exercises help to get rid of the pain in your fingertips.

கை, விரல், கை மூட்டு, தோள் பட்டை ஆகிய இடங்களில் பிடிப்பு, வலி உண்டாவதை தசை நார் பிரச்சனை என்பர். இதனால் கைகளை மடக்கவும், நீட்டவும் முடியாமல் வலி ஏற்படும்.

இந்த மாதிரியான தசைநார் பிரச்சனை ஏற்படும்போது, பெருவிரலில் அதிக அளவில் வலி ஏற்படும். அதை வைத்தே இது தசைநார் பிரச்சனை என அறிந்து கொள்ளலாம்.

கைகளுக்கு இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டே இருப்பதால்தான் இது போன்ற தசைநார் பிரச்சனைகள் உண்டாகின்றன.

இதற்கு பேனாவைப் பிடித்து எழுதும் முறைகளும் ஒரு காரணம்தான். ஏனெனில், சிலர் பேனாக்களை இறுக்கமாகப் பிடித்து எழுதுவார்கள். ஒரு சிலர் சாய்த்து பிடித்து எழுதுவார்கள். தொடர்ச்சியாக இடைவெளியே இல்லாமல் எழுதிக்கொண்டே இருந்தாலும், தசை நார் பிரச்சனைகள் ஏற்படும்.

பெரும்பாலும் எழுத்துத் துறைகளில் உள்ளவர்களுக்கு, குறிப்பாக 30 முதல் 50 வயதுள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை வரும். சில மாணவர்களுக்கு அதிக அளவில் எழுதுவதால் கூட வரலாம்.

தட்டச்சு இயந்திரம் அல்லது கணினியில் தட்டச்சு செய்பவர்கள் விரல்களுக்கு அதிக அளவில் வேலை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கும் இது போன்ற பிரச்சனைகள் வரும்.

சில தட்டச்சுகள் கடினமானவையாக இருக்கும். அப்போது விரல்களுக்கு அதிக அளவு பளு கொடுப்பதால், விரல்கள் வலுவிழந்து வலியை ஏற்படுத்தும். டைப்ரைட்டிங், டேட்டா என்ட்ரி போன்ற தட்டச்சு தொடர்பான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும் இந்தப் பிரச்சனை வரலாம்.

மேலும், வீணை, கிடார், கீ போர்டு போன்ற இசைக்கருவிகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கும் கை விரல்களில் வலி, பிடிப்பு ஆகியவை ஏற்படும்.

இதுபோன்று எழுத்து, இசை மற்றும் கணினி பயன்படுத்தும் துறைகளில் வேலை செய்வோர் கைகள், விரல்கள் மற்றும் மூட்டுகள் ஆகியவற்றுக்கான பயிற்சிகளை அவசியம் மேற்கொள்ளணும்.

** எழுதுபவர்கள், சரியான முறையில் பேனாவைப் பிடித்து எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். படுத்துக்கொண்டே எழுதுவது, சரியான நிலையில் இல்லாமல் எழுதுவது போன்ற செயல்களைத் தவிர்ப்பது நல்லது.

** எந்த வேலையாக இருந்தாலும், தொடர்ந்து செய்யாமல் சற்று இடைவெளிவிட்டுச் செய்வது நல்லது.

** கைகள், விரல்களில் அடிக்கடி நெட்டி முறிப்பதைத் தவிர்க்கலாம். நெட்டி முறிப்பதால், இரண்டு மூட்டுகளின் இடையில் உள்ள வழவழப்புத்தன்மை பாதிக்கும்.

** கடினமான தட்டச்சுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

** நிமிர்ந்த நிலையில், சௌகரியமான நாற்காலியில் உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டும்.

** கைகளிலும், விரல்களிலும் தேங்காய் எண்ணெய் தடவி, மென்மையாக மசாஜ் கொடுக்கலாம்.

** விரல்களுக்கு என சில பயிற்சிகளைச் செய்யலாம். ஸ்ட்ரெஸ் பால், குழந்தைகள் விளையாடும் களிமண் ஆகியவற்றைக் கைகளில் வைத்துப் பிசையலாம். இவையும் விரல்களுக்கான சிறந்த பயிற்சிகள்தான்.

** வளைந்து கொடுக்கக்கூடிய கயிறுகளை, விரல்களுக்கு இடையே வைத்தும் விரல்களுக்கான பயிற்சிகளைச் செய்யலாம்.

** கை விரல்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை மடக்கி, நீட்டி வருவதும் நல்ல தீர்வாகும்.

** வெந்தயம், மிளகு ஆகியவற்றைத் தட்டில் கொட்டி அதை ஒவ்வொன்றாக விரல்களால் எடுப்பதும் சிறந்த பயிற்சி.

** கட்டைவிரல் நுனியோடு மோதிர விரலின் நுனி தொடுவது, அதுபோல, மற்ற அனைத்து விரல்களும் கட்டை விரல் நுனியைத் தொடுவது என்பதுபோல, இந்தப் பயிற்சியை ஒவ்வொரு விரலுக்கும் இரண்டு நிமிடங்கள் என நேரம் ஒதுக்கிச் செய்வது நல்லது

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க