உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வந்தால் இந்த உடல் நல குறைபாடுகள் இருக்கலாம்…

First Published Oct 2, 2017, 1:13 PM IST
Highlights
You may have health problems if you get bored often ...


நாம் அலுவலகம் அல்லது நண்பர்கள் மத்தியில் சிலரை கண்டிருக்கலாம், அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார்கள். காலை, மதியம், மாலை என இவர்கள் கொட்டாவி விடாத நேரமே இருக்காது.

இப்படி அடிக்கடி கொட்டாவி விட இந்த உடல் நல குறைபாடுகள் தான் காரணம்:

கல்லீரலை பிரச்சனை

சோர்வின்றி அடிக்கடி உங்களுக்கு கொட்டாவி வந்துக்கொண்டே இருந்தால் நீங்கள் கல்லீரல் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். கல்லீரலில் பலவீனம், அல்லது செயல்திறன் குறைபாடு ஏற்பட்டால் கூட கொட்டாவி அடிக்கடி வருமாம்.

மல்டிபிள் கெலொரிசிஸ்

மல்டிபிள் கெலொரிசிஸ் தாக்கம் ஏற்பட்டவர்களுக்கு அவர்களது உடலின் வெப்ப நிலையை சமநிலையில் வைத்துக் கொள்ள முடிவதில்லை எனவும் இந்த நிலைகூட அதிகம் கொட்டாவி வர செய்யும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூளை பிரச்சனை

அதிகமாக கொட்டாவி வர மற்றுமொரு காரணமாக கருதப்படுவது மூளையின் ஆரோக்கியம். மூளை அலர்ஜி, ஸ்ட்ரோக், போன்றவையின் அறிகுறி தான் அதிகமாக வரும் கொட்டாவி என்கின்றனர். மூளையின் தண்டில் ஏற்படும் புண்களினால் கூட அதிகம் கொட்டாவி வருமாம்.

கை-கால் வலிப்பு

கொஞ்சம் அதிர்சியாக இருந்தாலும் கூட நம்பி தான் ஆகவேண்டும். சோர்வின்றி அடிக்கடி கொட்டாவி வருவது கை-கால் வலிப்பு ஏற்படுவதனால் கூட இருக்கலாம். வலிப்பு ஏற்படுவதால் மூளையில் ஏற்படும் எரிச்சல் ஓர் சிக்னலை வெளிப்படுதுமாம், அதனால் கூட அதிகம் கொட்டாவி வரலாம்.

மருந்துகள்

நீங்கள் அடிக்கடி எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளின் விளைவால் ஏற்படும் சோர்வு கூட அடிக்கடி கொட்டாவி வர காரணமாக இருக்கலாம். மருந்து மாத்திரைகள் உங்களை தூக்க நிலைக்கு எடுத்து செல்ல கூடியவை. அந்த மயக்க நிலையின் காரணத்தினாலும் கொட்டாவி வருகிறது.

தூக்க குறைபாடு

தூக்கமின்மை போன்ற தூக்க குறைபாடுகளினால் கூட அதிகம் சோர்வின்றி கொட்டாவி வரலாம்.

களைப்பு

பெரும்பாலும் அனைவருக்கும் அதிகம் கொட்டாவி வருவதற்கு காரணமாக இருப்பது உடல் சோர்வும் மன அழுத்தமும் தான்.

சோர்வாக இல்லாமல் அதிகம் கொட்டாவி மட்டும் வந்துக் கொண்டிருந்தால் மருத்தவரிடம் பரிசோதனை செய்வது நல்லது.

click me!