உங்களுக்குத் தெரியுமா? குழந்தைகளுக்கு பற்கள் ஆரோக்கியமாக வளர நாயுருவி குச்சிகளை பயன்படுத்தணும்...

 
Published : Sep 30, 2017, 01:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
உங்களுக்குத் தெரியுமா? குழந்தைகளுக்கு பற்கள் ஆரோக்கியமாக வளர நாயுருவி குச்சிகளை பயன்படுத்தணும்...

சுருக்கம்

Do you know Nail sticks are used to grow healthy teeth for children ...

இன்று உங்கள் பேஸ்டில் உப்பு இருக்கா? கார்கோல் இருக்கா? என வெறும் இரசாயனப் பொருட்களின் கலப்பை கொண்டு மட்டுமே விற்று வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருகின்றன பெரிய பெரிய நிறுவனங்கள்.

ஆனால், முந்தைய காலத்தில் எந்த பேஸ்ட்டும், டூத்ப்ரஷும் இன்றியே நமது முன்னோர்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்திருந்தனர்.

அந்த வகையில் அவர்கள் பயன்படுத்திய பல வகை பல் தேய்க்கும் குச்சிகளும், அதன் பயன்களும் பற்றி இங்கு காணலாம்….

1.. தீராத பல் வலிக்கு தீர்வு

தீராத பல் வலிக்கு தீர்வுக் காண நமது முன்னோர்கள் எருக்கு குச்சிகளை கொண்டு பல் துலக்கி வந்துள்ளனர்.

2.. குழந்தைகளின் பற்களின் வளர்ச்சிக்கு

குழந்தைகளுக்கு பற்கள் நன்கு ஆரோக்கியமாக வளர நாயுருவி குச்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

3.. பல் வியாதிகள் நீங்க

பல் சார்ந்த வியாதிகளுக்கு தீர்வுக் காண கருங்காலி குச்சிகள் பயன்படுத்தியுள்ளனர் நமது முன்னோர்கள்.

4.. வாய் துர்நாற்றம் குறைய

புங்கு மற்றும் சம்பகம் எனும் குச்சிகளை வாய் துர்நாற்றத்தில் இருந்து தீர்வுக் காண பயன்படுத்தி வந்துள்ளனர் நமது முன்னோர்கள்.

5.. வாய் புண்கள் சரியாக

ஆலகுச்சிகளை வாய்ப்புண்களை அகற்றி பற்களை வலுப்படுத்த பயப்படுதியுள்ளனர். பெரும்பாலும் ஆலகுச்சிகளை தான் தினந்தோறும் பல் துலக்க பயன்படுத்தியிருக்கிறார்கள்.

6.. பற்களை சுத்தம் செய்ய

பற்களில் படிந்திருக்கும் கரையை அகற்ற அல்லது சுத்தம் செய்ய மருது குச்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது

7.. வாயை சுத்தம் செய்ய

புரசு மர குச்சிகள் வாயை சுத்தம் செய்ய பயன்படுத்தி இருக்கிறார்கள்.

8.. ருசிக்கு

ருசியளிக்கும் திறனை அதிகரிக்க வேம்பு குச்சிகள் பயன்படுத்தப்பட்டதாம்.

9.. பல் கூச்சம் குறைய

சிலருக்கு குளிர்ச்சியான உணவுப் பொருட்களை உண்ண முடியாது. சாப்பிட்டால் பல் கூச்சம் ஏற்படும். இந்த பல் கூச்சத்தை போக்க அரச மர குச்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

10. பற்கள் பளிச்சிட

பற்கள் நன்கு வெள்ளையாக பளிச்சென்று இருக்க கருவேலம் மர குச்சிகளை நமது முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Knee Pain Relief Tips : தாங்கவே முடியாத மூட்டுவலிக்கும் 'நிவாரணம்' அளிக்கும் எளிய வழிகள்; ஒருமுறை செஞ்சு பாருங்க
Tea : டீ குடிக்குறப்ப வடை, பஜ்ஜி சேர்த்து சாப்பிடுறவங்க 'கவனிக்க' வேண்டிய விஷயம்