ஊறவைத்த பேரீச்சம்பழத்தில் உடலுறவுக்கான சக்தியின் ரகசியம் அடங்கியுள்ளது. இந்த பழத்தை முறையாக சாப்பிடுவதன் மூலம் பல்வேறு ஆபத்தான நோய்களில் இருந்தும் விடுபடலாம். தெரியுமா உங்களுகு?
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பேரீச்சம்பழம் பல நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது. நம்முடைய உணவுப் பழக்கவழக்கத்தில் இதை அவ்வப்போது சேர்த்துக்கொண்டால், ரத்த சக்கரையை கட்டுப்படுத்தலாம். ஆனால் அளவுடன் சாப்பிடுவது மிகவும் முக்கியம். உடல் சோர்ந்து போகும் நேரங்களில், பேரீச்சையை சாப்பிடுவது மூலம் தினசரி வேலைக்கான ஆற்றல் கிடைக்கிறது. அதன் நன்மைகள் காரணமாக பேரீச்சைப் பழம் ஆரோக்கியத்தின் பொக்கிஷம் என்றும் அழைக்கப்படுகிறது. அதிலுள்ள இயற்கையான இனிப்பு உடலுக்கு நன்மையை சேர்க்கும். கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், துத்தநாகம் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பேரீச்சைப் பழம் குறித்து இன்னும் பல்வேறு தகவல்களை பார்க்கலாம்.
பாலியல் பிரச்னைகளை நீக்கும்
தவறான உணவுப்பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை போன்றவற்றால் இன்றைய காலத்தில் ஆண்களிடையே பல பாலியல் பிரச்சனைகள் உள்ளன. அதனால் அவர்கள் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. தினமும் 4 பேரீச்சம்பழங்களை பாலில் வேகவைத்து சாப்பிடுவது உடல் ஆற்றலை அதிகரிப்பதோடு, விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது.
பீட்ரூட்டை இப்படி சாப்பிட்டீங்கன்னா கை மேல் பலன் கிடைக்கும்..!!
செரிமான கோளாறு நீங்கும்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் பேரீச்சம்பழம் சாப்பிடுபவருக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்படாது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இது அஜீரணம், வயிற்று வலி, வாயு மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது. வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளால் குழந்தைகள் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு பேரீச்சைப் பழத்தை சாப்பிட்டக் கொடுக்கலாம். தினமும் 2 முதல் 3 பேரீச்சம்பழங்களை ஊறவைத்து சாப்பிட்டால், உடனடியாக பிரச்னை நீங்கும்.
உடல் எடையை அதிகரிக்கும்
பேரிச்சம்பழம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தினமும் பாலுடன் 4 பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவாக உள்ளவர்களுக்கு, எடை வேகமாக அதிகரிக்கும். மேலும் குடல்வாய் பாதிப்பு கொண்டவர்கள் பேரீச்சைப் பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வருவதன் மூலம், பிரச்னைக்கு தீர்வை தரும். இது மன ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது.