உடலுறவின் போது மனச்சோர்வுக்கு ஏற்படுகிறதா? இதைப்படிங்க முதல்ல..!!

By Dinesh TG  |  First Published Dec 11, 2022, 10:30 AM IST

உடலுறவின் போது பலரும் மனச்சோர்வு அடைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது எதிர்கால வாழ்க்கைக்கு அவ்வளவு நல்லதல்ல. குறிப்பிட்ட பயிற்சி மற்றும் வாழ்க்கையை முறையை பின்பற்றுவதன் மூலம், இந்த பிரச்னையில் இருந்து உடனடியாக விடுபடலாம்.
 


இரண்டு உடலும் சேரும் போது உடல்கள் ஐக்கியம் அடைகின்றன. இரண்டு உடலும் கடுமையான வெப்பத்தால் இணைந்து ஐக்கியம் அடைக்கின்றன. அதுதான் உடலுறவுக்கான முக்கிய செயல்பாடு. தம்பதிகள் தங்களுடைய தாம்பத்தியத்தை எப்போதும் முழுமையாக அனுபவிக்க வேண்டும். ஆனால் அதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், ஒட்டுமொத்த உடல் இயக்கமும் நின்றுவிட்டதாக உணர்கின்றனர். அது அவர்களுக்குள் மனச்சோர்வு ஏற்படுகிறது. மனித மனம் உடல் அமைப்பை விட மிகவும் சிக்கலானது. உடலுறவுக்குப் பிறகு மனச்சோர்வு ஏற்படுவது சகஜம் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் அதை அப்படியே விட்டுவிடக் கூடாது. 

ஒவ்வொருவருக்கும் செக்ஸ் பற்றி வெவ்வேறு கற்பனைகள் இருக்கும். பலர் உடலுறவை வெவ்வேறு வழிகளில் அனுபவிக்கிறார்கள். இருப்பினும், அதுதொடர்பான கேள்விகள் என்பது அனைவருக்கும் பொதுவானதாகவே உள்ளன. நமக்கு நல்ல புரிதல் இருந்தால், பாலியல் வாழ்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு உடனடியாக தீர்வை காணலாம். ஆனால் உடலுறவுக்கு பிறகு, மனச்சோர்வு காரணம் ஏற்படாமல் வரக்கூடும். டலுறவுக்குப் பிறகு மனச்சோர்வு ஏற்படுவது இயல்பானது தான் எந்தவிதமான பிரச்னையும் இல்லை. 

Latest Videos

இயற்கையான முறையில் விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்க எளிய டிப்ஸ்..!!

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் இது பொருந்தும். ஆனால் இந்த பாலியல் விரக்தி பெண்களிடம் தான் அதிகம் உள்ளது. உடலுறவின் போது எண்டோர்பின்கள், ஆக்ஸிடாஸின் மற்றும் ப்ரோலாக்டின் உள்ளிட்ட பல ஹார்மோன்களை வெளியிடுகிறது. அது ஒருசிலருக்கு மனச்சோர்வு அல்லது விரக்தியை ஏற்படுத்துகிறது. இதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. பல சந்தர்ப்பங்களில் இது உடலுறவு நடைபெறும் சூழ்நிலையையும் சார்ந்துள்ளது. உறவின் நிச்சயமற்ற தன்மை பாலியல் விரக்திக்கும் வழிவகுக்கும் என்று வேண்டுமானால் புரிந்துகொள்ளலாம்.

உடலுறவுக்குப் பிறகு பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். சரியான காரணத்தை நீங்கள் அறிந்தால் மட்டுமே சிக்கலைத் தீர்ப்பது சாத்தியமாகும். பல சமயங்களில் பல பிரச்சனைகள் விவாதத்தின் மூலம் தீர்க்கப்படுகின்றன. ஒன்றாக உட்கார்ந்து அதை தீர்க்க முயற்சி செய்யுங்கள். உடலுறவுக்குப் பிறகு மந்தமாக உணர்ந்தால் பாடல்களைக் கேட்கலாம். ஏனென்றால் இசையைக் கேட்பது மனதை நன்றாக உணரவைக்கும் என்பது முக்கிய காரணமாகும். 

உடலுறவுக்குப் பிறகு உங்களுக்குப் பிடித்த இசையை ஒலிக்கச் செய்வது கொஞ்சம் நன்றாக இருக்கும். மன அழுத்தத்தை போக்க உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்வது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதோடு மனதையும் அமைதிப்படுத்துகிறது. ஆனால் தினமும் இந்தப் பிரச்சனை இருந்தால், மனநல மருத்துவரை அணுகலாம். ஏனெனில் மனச்சோர்வு என்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது ஏதேனும் உடல்நலப் பாதிப்பின் முக்கிய அறிகுறியாகவும் இருக்கலாம்.
 

click me!