உடல் துர்நாற்றத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்- இந்த பாதிப்பாக இருக்கலாம்..!!

By Dinesh TG  |  First Published Dec 11, 2022, 1:35 AM IST

தொடர்ந்து குளிக்காமல் இருப்பது, துவைக்காத ஆடைகளை அணிவது போன்றவை உடல் துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன. இவை உடலை போதுமான அளவில் சுகாதாரமாக பராமரிக்காததால் ஏற்படுகின்றன. 
 


உடல் துர்நாற்றம் என்பது பலரைத் தொந்தரவு செய்யும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும். வியர்வை மட்டுமின்றி சருமத்தில் காணப்படும் பாக்டீரியாவால் உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது. உடலில் உள்ள முடிகள் பாக்டீரியாக்கள் தங்கி துர்நாற்றத்தை உண்டாக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது. சில உடல் துர்நாற்றங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக எப்படி இருக்கும் என்பதை அறிவது முக்கியம். தொடர்ந்து குளிக்கா துர்நாற்றம் அதிகரிக்க காரணமாக அமைகின்றன. 

வியர்வை மற்றும் உடல் துர்நாற்றம் ஆகியவை பலருக்கு மிகவும் பொதுவான பிரச்னையாக உள்ளன. இயல்பை விட அதிகமாக வியர்க்கும் நபர்களுக்கு ஹைப்பர்ஹைட்ரோசிஸ் எனப்படும் ஒரு நிலை கண்டறியப்படலாம். முதன்மை ஹைப்பர்ஹைட்ரோசிஸ் என்பது ஒரு குறிப்பிட்ட காரணமின்றி ஏற்படும் ஒப்பீட்டளவில் அரிதான நிலை. ஹைப்பர்ஹைட்ரோசிஸ் பெரும்பாலும் மருத்துவ பிரச்சனையுடன் தொடர்புடையது. மன அழுத்தம், சில மருந்துகளை சாப்பிடுவது மற்றும் ஆல்கஹால் உட்கொள்ளும் பழக்கம் காரணமாகவும் உடலில் துர்நாற்றம் அதிகரிக்கிறது.

Latest Videos

undefined

மனித உடலில் எக்ரைன் சுரப்பிகள் மற்றும் அபோக்ரைன் சுரப்பிகள் என இரண்டு வகையான வியர்வை சுரப்பிகள் உள்ளன. எக்ரைன் சுரப்பிகள் உடலின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகின்றன.உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது இந்த சுரப்பிகள் வியர்வையாக திரவங்களை சுரக்கின்றன. அபோக்ரைன் சுரப்பிகள் உங்கள் அக்குள் மற்றும் இடுப்பு போன்ற முடி உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன. அபோக்ரைன் சுரப்பிகள் பருவமடையும் போது செயல்படத் தொடங்கும். இதனால்தான் குழந்தைப் பருவத்தில் உடல் துர்நாற்றம் ஏற்படாது. இந்த சுரப்பிகள் பிசுபிசுப்பு, புரதம் நிறைந்த வியர்வையை உற்பத்தி செய்கின்றன. ஆரோக்கியமான சருமத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள் புரதங்களின் மிகுதியை உடைப்பதால், அவை அதிக செறிவூட்டப்பட்ட வாசனை மூலக்கூறுகளை உருவாக்கி உடல் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன

இந்த 5 பொருட்கள் இருந்தால் போதும்- நீரிழிவுப் பிரச்சனை உங்களை அண்டாது..!!

ஒரு நபரின் தோலில் உள்ள பாக்டீரியாக்கள் வியர்வையில் உள்ள புரத மூலக்கூறுகளை உடைப்பதால் உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது, இதன் விளைவாக துர்நாற்றம் ஏற்படுகிறது. சில குறிப்பிட்ட உணவுகள் மூலமாகவும் வியர்வை துர்நாற்றம் ஏற்படும். பூண்டு மற்றும் வெங்காயத்தில் சல்பர் உள்ளது. அதை சாப்பிடும் போது முறிந்தால், துளைகள் வழியாக வெளியேறுகிறது. இதனால் வியர்வை வாடை வீசும். நீரிழிவு, வளர்சிதை மாற்றக் கோளாறு, புரோமிட்ரோசிஸ், ஹைப்பர்ஹைட்ரோசிஸ், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாடு குறைபாடு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் அனைத்தும் உடல் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். நல்ல சுகாதாரத்தை பராமரிக்கவும் மற்றும் PH சமநிலைப்படுத்தும் டியோடரண்டுகள் மற்றும் சோப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் இதை தடுக்கலாம். சல்பர் அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பதும் நல்ல பலனை தரும்.
 

click me!