பீட்ரூட்டை இப்படி சாப்பிட்டீங்கன்னா கை மேல் பலன் கிடைக்கும்..!!

By Dinesh TG  |  First Published Dec 10, 2022, 11:27 PM IST

ஒவ்வொருவரும் முடிந்தவரை எடை குறைப்புக்கான பயணத்தில் பல்வேறு டயட்களை பின்பற்றி வருகிறோம். அந்த வரிசையில் தினமும் பாதியளவு உணவு சாப்பிட்டு டயட் செய்வார்கள், சிலர் உடற்பயிற்சி செய்து உடம்பை குறைப்பார்கள். ஒருசிலர் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுகிறார்கள்.
 


அதிகப்படியான கொழுப்பை கரைக்க வேண்டும் என்பது அனைவருக்குமான கவலையாகவே உள்ளது. ஆனால் அதை குறைக்க நினைக்கும் போது தான் சிக்கலை சந்திக்கிறோம். அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை பெரும்பாலானோரால் சட்டென முடிவெடுக்க முடியாது. தற்போது நாடு முழுவதும் குளிர் காலம் நிலவி வருகிறது. அதை குறைக்க பீட்ரூட் சாப்பிடுவது நல்ல பலனை தரும். குளிர்காலங்களில் பீட்ரூட் சாகுபடி அதிகளவு நடக்கும். அதனால் குறிப்பிட்ட காலத்துக்கு உகந்த காய்கறியாக பீட்ரூட்டை குளிர்காலத்தில் தாராளமாக சாப்பிட்டு வரலாம். 

பீட்ரூட் கொண்டு செய்யப்படும் சாற்றில் எடை குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதில் வைட்டமின் சி, ஃபோலேட், நைட்ரேட்டுகள் என பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ரத்த அழுத்தம் அதிகளவு கொண்டவர்கள் பீட்ரூட்டை தொடர்ந்து சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது. இதில் நார்ச்சத்து மற்றும் பீட்டானின் நிறைந்துள்ளது. இது உடல்நலத்துக்கு முன்னேற்றம் வழங்குகிறது. 

Tap to resize

Latest Videos

பீட்ரூட் மற்றும் கேரட்

நீங்கள் பீட் மற்றும் கேரட் கொண்டு சாறு செய்வது மிகவும் எளிது. அதற்கு நடுத்தர அளவு கொண்ட பீட்ரூட்டை எடுத்துக்கொள்ளலாம். அதை கழுவி, தோலூரித்து நறுக்க வேண்டும். அதனுடன் கேரட் சேர்த்து பருக விரும்புபவர்கள், உடன் அதையும் சேர்த்து சுத்தம் செய்துகொள்ளலாம். கேரட் மற்றும் பீட்ஸை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். நன்றாக அரைந்ததும், வடிகட்டி பருகலாம். அவ்வளவுதான். இதனுடைய செயல்முறை மிகவும் எளிமையானது தான்.

பீட்ரூட் மற்றும் ஆப்பிள்

வெறும் பீட்ரூட்டுன் கேரட் மட்டுமின்றி, அதனுடன் ஆப்பிள் துண்டங்களையும் சேர்த்து சாறு செய்யலாம். இதுவும் ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மையாக தான் இருக்கும். ஒரு நடுத்தர அளவிலான ஆப்பிள், ஒரு பீட் மற்றும் ஒரு கேரட் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அனைத்தையும் துண்டுகளாக வெட்டுங்கள். ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் கலவையை மிக்ஸியில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும். பிறகு அதை வடிகட்டினால் பீட்ரூட் ஆப்பிள் ஜூஸ் தயார்.

பீட்ரூட் மற்றும் எலுமிச்சை

எலுமிச்சை சாறு மற்றும் பீட்ரூட் சேர்த்து தயாரிக்கப்படும் சாறு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை சேர்ப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இது ஆரோக்கியமான எடை இழப்புக்கும் பெரிதும் உதவுகிறது. பீட்ரூட்டை வாங்கி வந்து நன்றாக கழுவி சுத்தம் செய்து நன்றாக கழுவிக் கொள்ளவும். அதை மிக்ஸியில் சேர்த்து அரைத்ததும், வடிகட்டி ஒரு டம்ளரில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். நன்றாக கலக்கினால் பீட்ரூட் எலுமிச்சை சாறு ரெடி.

நகங்களை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு இந்த 5 டிப்ஸ் போதும்..!!

பீட்ரூட் மற்றும் கீரைகள் 

கீரையுடன் சேர்த்து தயாரிக்கப்படும் பீட்ரூட் சாறுக்கு மிகுந்த ஆற்றல் உள்ளது. நன்றாக பச்சை நிற கீரைகளை வாங்கி வந்து கழுவிக்கொள்ள வேண்டும். அதை பச்சையாக சாப்பிட பிடிக்காதவர்கள். இட்லி பாத்திரத்தில் வைத்து ஒரு வேக்காடு விட்டு எடுக்கலாம். அதை நறுக்கி வைத்த பீட்ரூட்டுடன் சேர்த்து, நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிது உப்பு மற்றும் ஒரு அரை டம்ளர் சேர்த்து கலக்கி சாப்பிட்டால், சுவை நன்றாக இருக்கும். இதுவும் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

பீட்ரூட் திராட்சை சிரப்

திராட்சைப் பழம் மற்றும் பீட்ரூட் கொண்ட செய்யப்படும் சிரப்பில் நிறைய பயன்கள் உள்ளன. இதுவும் ஆரோக்கியத்தை நல்ல முறையில் மேம்படுத்தக் கூடிய பொருளாகவே உள்ளது. இவை இரண்டையும் கொண்டு தயாரிக்கப்படும் சிரப்புக்கு உடல் சிக்கல்களை நீக்கும் தகுதி உள்ளது. எடை குறையும், சருமமும் பொலிவு பெறும். திராட்சைப்பழம் மற்றும் பீட்ரூட்களை மிக்ஸியில் அரைத்துக் கொண்டு, வடிகட்டி குவளையில் சேர்த்து குடிக்கலாம். சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிட்டால், இந்த சாற்றை குடித்துக்கொண்டே இருக்க விரும்புவோம்.

click me!