நகங்களை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு இந்த 5 டிப்ஸ் போதும்..!!

மற்ற உடல் உறுப்புகளைப் போலவே நமது நகங்களுக்கும் கவனிப்பும் பராமரிப்பும் தேவைப்படுகிறது. தொடர்ந்து நகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முயல்வதற்கு, அதிகளவில் பணம் செலவழிக்காமல் குறிப்பிட்ட பழக்கவழக்கத்தை பின்பற்றலாம்.
 

5 healthy tips to follow growth of nails

ஆரோக்கியமான நகங்கள் நமது உடல் சுகாதாரத்தின் பிரதிபலிப்பாகும். ஆரோக்கியமான நகங்களைக் கொண்டிருப்பதற்கு உரியமுறையில் பராமரிப்பு செய்வது அவசியம். அதற்கு நகங்களுக்கு சரியான கவனம் செலுத்த வேண்டும் மற்றும் சீரான உணவைப் பழக்கத்தின் வாயிலாக வலுவான, ஆரோக்கியமான நகங்களைப் பராமரிக்கலாம். அதிகளவில் தண்ணீர் குடிப்பது, அடிக்கடி கை கழுவுவது போன்ற செயல்பாடுகள் கூட நகங்களை பாதிக்கச் செய்துவிடும். வலுவான, ஆரோக்கியமான நகங்களை பராமரிக்க சீரான உணவுப் பழக்கம் தேவை. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

கையுறைகள்

சோப்புகள் மற்றும் ஸ்ப்ரேக்கள் இரண்டிற்கும் தேவைப்படும் பாத்திரங்களைக் கழுவும்போது அல்லது வீட்டைத் தூசும் போது கையுறைகளை அணியலாம். கையுறைகள் நம் கைகளையும் நகங்களையும் சேதப்படுத்தும் இரசாயனங்கள் மற்றும் தேவையற்ற நீர் வெளிப்பாடு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கின்றன. அதனால் நீண்ட நேரம் கையை தண்ணீர் வைத்திருக்காதீர்கள்.

சிறிய நகங்கள்

எப்போதும் நகங்களை குறுகிய அளவில் வைத்திருக்க விரும்புங்கள். அதுபோன்ற நகங்களை பராமரிப்பது எளிது. குறுகிய நகங்களை எளிதாக சுத்தம் செய்துவிடலாம். அதேபோல அதில் அழுக்கு சேருவதும் குறைவுதான். சிறியளவில் நகங்களை வைத்துக்கொண்டால், என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம். குறுகிய நகங்கள் ஆபத்தான பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுவது குறிப்பிடத்தக்கது.

போலி நகங்கள் வேண்டாம்

இன்றைய காலத்தில் பலரும் செயற்கை நகங்களை அணிவதில் விருப்பம் கொண்டுள்ளனர். அதன்மூலம் தோற்றம் அழகாக தெரிந்தாலும், தீமைகள் தான் நிறைந்திருக்கின்றன. இதுபோன்ற செயற்கை நகங்களை, நம்முடைய நகங்களுடன் ஒட்டுவதற்கு பசை பயன்படுத்தப்படுகிறது. அது நம் உடலோடு ஒட்டிய நகங்களை பலவினமடையச் செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதுதவிர, அந்த பசையில் காற்றிலுள்ள நுண்கிருமிகள் வந்து ஒட்டிக்கொள்கின்றன. இதனால் பல பாக்டீரியா நோய்களுக்கு நாம் ஆளாகவும் நேரிடுகிறது.

இந்த 5 பொருட்கள் இருந்தால் போதும்- நீரிழிவுப் பிரச்சனை உங்களை அண்டாது..!!

ஆரோக்கியமான உணவு தேவை

ஒட்டுமொத்த உடல் மற்றும் வலுவான நகங்களுக்கு சீரான உணவு அவசியம். வலுவான நகங்களை உருவாக்க தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் தேவை. உங்களுக்கு பலவீனமான நகங்கள் இருந்தால், மருத்துவரை உடனடியாக சென்று பாருங்கள். அவர் பயோட்டின் போன்ற மருந்துகளை வழங்கினால் முறையாக உட்கொண்டு வாருங்கள்.

தண்ணீர் 

எப்போதும் போதுமான அளவு தண்ணீர் குடித்து வாருங்கள். இதன்மூலம் நகங்களுக்கு ஈரப்பதம் கிடைகும். இதன்மூலம் நகங்கள் உரிக்கப்படுவதும் உடைவதும் தடுக்கப்படும். கொரோனா நோய் பாதிப்பு தொடங்கியதில் இருந்து, சானிட்டசைர் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இது நமது தோல் மற்றும் நகங்களுக்கு மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுகிறது. அதனால் கைகளை சோப்புப் போட்டு கழுவுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios