மனிதனை அமைதியாக கொல்லும் ஆபத்தான நோய்கள்.. இந்த எச்சரிக்கை அறிகுறிகளை கவனிக்காம இருக்காதீங்க..

By Ramya s  |  First Published Aug 19, 2023, 8:09 AM IST

சைலண்ட் கில்லர்ஸ் என்று அழைக்கப்படும் 3 நோய்கள் குறித்தும், அதன் எச்சரிக்கை அறிகுறிகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.


பொதுவாக நோய்கள் ஏற்படும் போது வெளிப்படையாக சில அறிகுறிகள் தோன்றும். ஆனால் சில உடல் நலப்பிரச்சனைகள் எந்த எச்சரிக்கை அறிகுறிகளையும் காட்டாமல் உடலில் ரகசியமாக இருக்கும். இந்த நோய்கள் தங்களுக்கு இருப்பதே பலருக்கும் தெரியாவது. இந்த வகை நோய்கள்  "சைலண்ட் கில்லர்ஸ்" (Silent KIllers) என்று அழைக்கப்படுகின்றன, அந்த நோய் ஒரு மேம்பட்ட நிலைக்கு முன்னேறும் போது அறிகுறிகள் அடிக்கடி தோன்றும். இதனால் அந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பது கடினமாக மாறும். சிக்கல்களை மேலும் அதிகமாக்கும். 

எனவே சைலண்ட் கில்லர்ஸ் என்று அழைக்கப்படும் 3 மருத்துவ நிலைமைகள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த நோய்கள் காரணமாக உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் இறக்கின்றனர். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கணைய புற்றுநோய் ஆகியவை இதில் அடங்கும். இந்த நோய்களுக்கு எப்பொழுதும் எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றாது என்றாலும், சில சமயங்களில்தன் அறிகுறிகளை அறிந்துகொள்வது சரியான நேரத்தில் கண்டறிய உதவும்.

Latest Videos

3 தடுப்பூசிகள் போட்ட பிறகும் கோவிட் ஆண்டிபாடிகள் இல்லை.. இவர்களுக்கு தான் அதிக ஆபத்து.. புதிய ஆய்வு

உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தம் இதய நோய் முதல் பக்கவாதம் வரையிலான இருதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ள பலரும் தங்கள் அந்த நோய் இருப்பதை அறிந்திருக்க மாட்டார்கள். ஏனெனில் உயர் ரத்த அழுத்தம் இருந்தால், , ஏனெனில் இந்த நிலை இருந்தால் நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் அல்லது நோய்வாய்ப்பட்டதாக உணர வேண்டிய அவசியமில்லை. கவனம் செலுத்த வேண்டிய சில எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன:

உயர் ரத்த அழுத்தத்தின் எச்சரிக்கை அறிகுறிகள்

பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனின் கூற்றுப்படி, உயர் ரத்த அழுத்தத்திற்கு சில அறிகுறிகள் உள்ளன. மங்கலான பார்வை, மூக்கில் இரத்தப்போக்கு, மூச்சுத் திணறல், மார்பு வலி, தலைச்சுற்றல் மற்றும் தலைவலி ஆகியவை அதன் அறிகுறிகளில் அடங்கும். உங்கள் மருத்துவரிடம் இருந்து தெளிவான நோயறிதல் மற்றும் சிகிச்சையைப் பெற உங்கள் ரத்த அழுத்த அளவைப் பரிசோதிக்கவும்.

நீரிழிவு நோய்

மாரடைப்பு மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான சிக்கல்களுக்கு நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். இங்கிலாந்து சுகாதார அமைப்பின்  கூற்றுப்படி, ஆரம்ப அறிகுறிகள் "பொதுவாக இருக்கும்" என்பதால் பலருக்கு "பல ஆண்டுகள் " நீரிழிவு நோய் உள்ளது என்று தெரிந்திருக்கது. கடுமையான சிக்கல்களைத் தடுக்க நீரிழிவு நோயை சரியான நேரத்தில் கண்டறிவது அவசியம்.

நீரிழிவு நோயின் அறிகுறிகள்

 மிகவும் தாகமாக உணர்வது, வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழித்தால், குறிப்பாக இரவில், மற்றும் மிகவும் சோர்வாக உணர்ந்தால், உங்கள் மருத்துவரைச் சந்தித்து நீரிழிவு நோய் உள்ளதா என்று பரிசோதித்துக் கொள்வது அவசியம். மற்ற அறிகுறிகளில் எடை இழப்பு மற்றும் தசைகளின் மொத்த இழப்பு, பெண்ணுறுப்பு அல்லது ஆண்குறியை சுற்றி அரிப்பு அல்லது  மங்கலான பார்வை ஆகியவை அடங்கும்.

எடை குறைப்பு முதல் புற்றுநோய் தடுப்பு வரை.. கொத்தவரங்காயில் இத்தனை நன்மைகளா?

கணைய புற்றுநோய்

 கணைய புற்றுநோய் மற்ற புற்றுநோய்களை விட அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. அதாவது இதனால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். மேலும், இந்த வகை புற்றுநோய் பொதுவாக ஆரம்ப கட்டங்களில் அறிகுறிகளை ஏற்படுத்தாது. இருப்பினும், இந்த புற்றுநோயுடன் தொடர்புடைய சில அறிகுறிகள் இங்கே உள்ளன, அவற்றை நீங்கள் எப்போதாவது கண்டறிந்தால் நீங்கள் புறக்கணிக்கக்கூடாது. சரியான நோயறிதலுக்காக உங்கள் மருத்துவரை அணுகவும்.

மஞ்சள் காமாலை மற்றும் தோல் அரிப்பு, அடர்நிற சிறுநீர் கழித்தல் ஆகியவை கணைய புற்றுநோயின் அறிகுறிகளில் அடங்கும். ஒருவர் பசியின்மையை அனுபவிக்கலாம் அல்லது திடீரென அதிகமாக உடல் எடையை இழக்கலாம். உடல் சோர்வு,, அதிக வெப்பநிலை, அல்லது சூடு அல்லது நடுக்கம், அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருப்பது, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் அல்லது உங்கள் மலத்தில் ஏற்படும் பிற மாற்றங்கள் ஆகியவை  புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகளாகும்.

click me!