செல்லப்பிராணிகளுக்கு முத்த மழை பொழிவதால் உங்களுக்கு ஏற்படும் பக்கவிளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள். அடுத்தமுறை கவனமாக இருப்பீர்கள்.
பலரும் நாய், பூனை, ஆடு போன்ற தங்கள் வீட்டு வளர்ப்பு பிராணிகளை அதிகம் நேசிப்பார்கள். இதன் காரணமாக அவற்றை அதிகமாக கொஞ்சுவதையும், முத்தமிடுவதையும் வாடிக்கையாக வைத்திருப்பார்கள். செல்லப்பிராணிகளை தங்களுக்கு நெருக்கமான உறவை போல் நடத்துவார்கள். அவற்றை தங்கள் படுக்கையறையில் உறங்க வைக்கவும் சிலர் தயங்குவதில்லை.
செல்லப்பிராணிகளுடன் ஓயாத விளையாட்டும், அவற்றின் அருகாமையும் பலரின் தனிமையை போக்கக் கூடியது. தனிமையை துளியும் உணரவிடாத அளவுக்கு செல்லப்பிராணிகளின் நெருக்கம் இருக்கும். பலரின் மன அழுத்தத்தின் வடிகாலே செல்லப்பிராணிகள் தான். இப்படி செல்லப்பிராணிகளுடன் நேரம் செலவிடுவது சரிதான். ஆனால் அவற்றை செல்லமாக முத்தமிடுவது சரியா? செல்லப்பிராணிகளை முத்தமிடுவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்ன என்பது தெரியுமா?இங்கே பார்க்கலாம்.
பாக்டீரியா
செல்லப்பிராணிகளின் மீது பல வகையான பாக்டீரியா, வைரஸ்கள் காணப்படுகின்றன. விலங்கு நிபுணர்கள் தகவல்களின்படி, செல்லப்பிராணிகளின் வாயிலும், மனிதர்களின் வாயிலும் ஆயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. ஆனால் இந்த பாக்டீரியாக்கள் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே கலந்தால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
முத்தம்
பொதுவாக குழந்தைகளை முத்தமிடும்போது அவர்களுக்கு பாக்டீரியா போன்ற தொற்று ஏற்படலாம் என மருத்துவர்கள் கண்டிப்பார்கள். ஏனென்றால் முத்தம் கொடுக்கும்போது வாயில் உள்ள எச்சில் குழந்தைகளின் சருமத்தில் படும். இது குழந்தைக்கு பிரச்சனையாகலாம். அதைப் போல தான் செல்லப்பிராணிகளை முத்தமிடும்போது பாக்டீரியாக்கள் பரவ வாய்ப்புள்ளது. சொல்லப்பிராணிகளை நாம் என்ன தான் சுத்தமாக வைத்தாலும், அவை வெளியில் சென்று சுதந்திரமாக அலையக் கூடியவை. அதனால் எப்போதும் அவை பாக்டீரியா, வைரஸுகளின் இருப்பிடமாகவே மாறிவிடுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி
மண்ணில் உருளுதல், எச்சிலை நக்குதல், கண்ட இடங்களில் இரை தேடுதல் போன்றவை மூலம் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் பரவுகின்றன. நீங்கள் அந்த செல்லங்களை அன்புடன் முத்தமிடலாம். ஆனால் இதை அடிக்கடி செய்யும் போது, உங்களுடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாக குறையும்.
நோய் பாதிப்பு
செல்லப்பிராணிகளை முத்தமிடுவதால் ஈறு நோய், பிளேக் ஆகியவை வரலாம். உங்களுடைய வாயில் பாக்டீரியாவின் வளர்ச்சியும் ஏற்படலாம். செல்லப்பிராணிகளை முத்தமிடக்கூடாது என சொல்ல இதுவே காரணம்.
இதையும் படிங்க: சாப்பிட்டதும் ஒரு துண்டு வெல்லம்... இத்தனை நோய்கள் ஓடிவிடும்!
தோல் பராமரிப்பு
விலங்கு நிபுணர்களின் தகவல்களின்படி, பூனைகளுடன் தூங்குபவர்களுக்கு ரிங்வோர்ம், அரிப்பு போன்ற தோல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சிலருக்கு அரிப்பு வரலாம். ஒவ்வாமையாலும் அவர்கள் அவதிபட நேரலாம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால்.. இந்த அறிகுறிகள் இருக்குமாம்! உஷாரா பார்த்துங்க!!