குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால்.. இந்த அறிகுறிகள் இருக்குமாம்! உஷாரா பார்த்துங்க!!

By Ma riya  |  First Published May 10, 2023, 3:22 PM IST

உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமாக கருதப்படும் இரும்புச்சத்து குறைபாடு, குழந்தைகளுக்கு ஏற்பட்டால் மோசமான பாதிப்பு ஏற்படலாம். 


குழந்தைகள் வளரும் பருவத்தில் அவர்களுக்கு இரும்புச்சத்து அத்தியாவசியமானது. இன்றைய காலகட்டத்தில் சில குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு ஏன் இரும்பு சத்து அத்தியாவசியம்? இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும்? இரும்புச்சத்து அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த பதிவில் விரிவாக காணலாம். 

இரும்புச்சத்து 

Latest Videos

undefined

நுரையீரலில் இருந்து உடலின் பிற பகுதிகளுக்கு ரத்தத்தின் மூலம் ஆக்சிஜனை எடுத்துச் செல்ல இரும்புச்சத்துதான் உதவுகிறது. உடம்பில் உள்ள தசைகள் ஆக்சிஜனை சேமித்துக் கொள்ள இரும்புச் சத்து உதவுகிறது. குழந்தைகள் இரும்புச்சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ளாதபட்சதில், இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படும். அவர்களின் ரத்தம் குறைய ஆரம்பிக்கும். 

இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் 

இரும்புச்சத்து குறைவாக உள்ள குழந்தைகள் சோர்வாக காணப்படுவார்கள். இந்தக் குறைபாடு குழந்தைகளுடைய ஆற்றலை வெகுவாக குறைத்துவிடும். பொதுவாக ஒரு குழந்தைக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால், ரத்தசோகை ஏற்படும் வரை அந்த அறிகுறிகள் வெளிப்படாது. 

பொதுவான அறிகுறிகள் 

  • வெளுத்து போன சருமம் 
  • உடல் சோர்வு 
  • குளிர்ச்சியான கை, கால்
  • வளர்ச்சி தடை 
  • பசி ஏற்படாது 
  • அசாதாரணமாக மூச்சுவிடுதல் 
  • ஆளுமை சிக்கல்
  • நோய் எதிர்ப்பு சக்தியின்மை 

பாதிக்கப்படும் குழந்தைகள்

குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள், குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகள், தாய்ப்பால் அதிகம் அருந்தாத குழந்தைகள், ஒரு வயதிற்கு முன்பாகவே பசும்பால் அல்லது ஆட்டின் பாலை அருந்தும் குழந்தைகள், நாள்பட்ட நோய் பாதிப்புள்ள குழந்தைகள், ஆறு மாதங்களுக்குப் பிறகும் இரும்புச்சத்து இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்ளும் குழந்தைகள், உடல் பருமன் கொண்ட குழந்தைகள் எளிதில் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள். 

​குழந்தைகளுக்கு இரும்புச்சத்து எவ்வளவு தேவைப்படும்? 

  • பிறந்த 7 மாதம் தொடங்கி 12 மாதங்கள் வரை - 11 mg அளவு
  • 1 வயது தொடங்கி 3 ஆண்டுகள் வரை - 7 mg அளவு
  • 4 வயது முதல் 8 வயது வரை - 10 mg
  • 9 வயது முதல் 13 வயது வரை - 8 mg
  • 14 வயது முதல்18 வயது வரை - 11 mg

நகங்களை அடிக்கடி கடிக்கும் பழக்கம் இருக்கா? அதனால் வரும் பாதிப்புகள் இவ்வளவு இருக்கு!

குழந்தைக்கு என்னென்ன உணவுகள் கொடுக்க வேண்டும்? 

வளரும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கவும் ரத்தசோகை இருந்தால் குணமாகவும் சில உணவுகளை கொடுக்க வேண்டும். வெல்லம், முருங்கைக் கீரை போன்ற கீரைவகைகள், மாதுளை, பீட்ரூட், ப்ரோக்கோலி, பூண்டு, கேரட், உலர் பழங்கள், சின்ன வெங்காயம் உள்ளிட்ட உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். 

பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் தண்ணீரைக் கூட கொடுக்கக் கூடாது. இந்த நிலையில் இரும்பு சத்துக்காக அவர்களுக்கு வீட்டு வைத்தியம் செய்வது சரிவராது. பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் இரும்புச்சத்து குறைபாட்டை முறையாக மருத்துவர்களிடம் பரிசோதித்து தெரிந்து கொண்ட பின்னர் அவர்களுடைய அறிவுரைகளை பின்பற்றுங்கள். 

இதையும் படிங்க: சாப்பிட்டதும் ஒரு துண்டு வெல்லம்... இத்தனை நோய்கள் ஓடிவிடும்!

click me!