
Seven Dangerous Signs of Cancer in Women: இன்றைய காலத்தில் புற்றுநோய் என்பது பெண்கள் மற்றும் ஆண்கள் என இருவருக்கும் ஏற்படுகிறது. இருப்பினும் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் போன்ற சில வகை புற்றுநோய்கள் பெண்களுக்கு மட்டுமே ஏற்படுகின்றன. பெண்கள் தங்கள் பரபரப்பான வாழ்க்கையில் தங்களது ஆரோக்கியத்தை முற்றிலுமாக புறக்கணிக்கின்றனர். இதன் விளைவாக புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கு பலியாகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயின் சில பொதுவான மற்றும் புறக்கணிக்க கூடாதா 7 எச்சரிக்கை அறிகுறிகளை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பெண்கள் புறக்கணிக்க கூடாதா புற்றுநோயின் 7 அறிகுறிகள்:
1. விவரிக்க முடியாத எடை இழப்பு:
விவரிக்க முடியாத எடை இழப்பு பல நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். ஆனால், மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பைப் புற்றுநோய் போன்றவற்றாலும் எடை இழப்பு ஏற்படும்.
2. அதிகப்படியான சோர்வு:
அதிகப்படியான சோர்வு பல நோய்களின் அறிகுறியாக இருந்தாலும், சில நேரங்களில் சில புற்றுநோய்களின் அறிகுறியாகவும் இது இருக்கலாம்.
3. மார்பக மாற்றங்கள்:
மார்பக வடிவத்தில் மாற்றம், மார்பகத்தில் கட்டி, ஒரு மார்பகம் மட்டும் பெரிதாகுதல், மார்பகத் தோல் தடித்தல் போன்ற மார்பக மாற்றங்கள் மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
4. மலம் கழிப்பதில் மாற்றங்கள்:
வாயுத்தொல்லை, மலச்சிக்கல், செரிமானப் பிரச்சினைகள், வயிற்று வலி, மலம் கழிப்பதில் மாற்றங்கள், மலத்தில் இரத்தம் போன்றவை கருப்பைப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
5. இரத்தப்போக்கு;
மாதவிடாய் காலம் தவிர மற்ற நேரங்களில் ஏற்படும் இரத்தப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாய் காலத்தில் அசாதாரண வலி போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தக்கூடாது. அவையும் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
6. இருமல் மற்றும் குரல் மாற்றம்:
தொடர்ச்சியான இருமல், சளி, குரல் மாற்றம், கழுத்தில் கட்டிகள், வீக்கம் போன்றவற்றையும் அலட்சியப்படுத்தக்கூடாது. அவையும் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
7. தோல் மாற்றங்கள்:
தோலில் புதிய புள்ளிகள் தோன்றுதல், ஏற்கனவே உள்ள புள்ளிகளின் நிறம், வடிவம், அளவு போன்றவை மாறுதல் போன்றவை தோல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
குறிப்பு: மேற்கண்ட அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ளுங்கள்.