Diabetes : சர்க்கரை நோயை குணப்படுத்த கிருமியா? கனடா விஞ்ஞானிகளின் புதிய சிகிச்சை முறை! நிரந்தர தீர்வு

Published : Aug 29, 2025, 08:59 AM IST
Diabetes

சுருக்கம்

சர்க்கரை நோயை குணப்படுத்தும் புதிய கிருமியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சர்க்கரை நோய்க்கு பல சிகிச்சை முறைகள் உள்ளன. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, நல்ல தூக்கம், மருந்துகள் எல்லாம் ஒருசேர சரியாக இருந்தால்தான் சர்க்கரை நோயை குணப்படுத்தலாம். அதுவும் கட்டுக்குள்தான் வைக்க முடியும். நிரந்தர தீர்வு அல்ல. ஆனால் கனடா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குடலுக்குள் பாக்டீரியாவை வைப்பதன் மூலம் சர்க்கரை நோயை நிர்வகிக்க புதிய தீர்வை கண்டுபிடித்துள்ளது.

இந்த ஆராய்ச்சியில் குடல் பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யும் டி-லாக்டேட் என்ற மூலக்கூறு முக்கிய பங்காற்றுகிறது. இதுவே கல்லீரலை நன்கு வேலை செய்ய வைத்து, இரத்த சர்க்கரையை அதிகரிக்கும். அதிகமான கொழுப்பைச் சேமிக்கும். இதை கட்டுக்குள் வைக்க இன்சுலினை நேரடியாகக் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக இரத்த சர்க்கரையை அதிகரிக்கும் டி-லாக்டேட்டை விஞ்ஞானிகள் குறிவைத்துள்ளனர். டி- லாக்டேட் இரத்த ஓட்டத்தில் கலக்கும் முன்பு அதை கட்டுக்குள் வைக்கும் குடல் கிருமியை கனாடா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சோதனையை நல்ல கொழுத்த பருமனான எலிகளில் செய்தபோது, இரத்த சர்க்கரை அளவுகள் மேம்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இன்சுலின் எதிர்ப்பும் குறைந்து, மீண்டும் கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட்டது. ஆனால் இது நடக்கும் முன் உணவு முறை, உடல் எடையில் மாற்றங்கள் இல்லை. குடல்-கல்லீரல் தொடர்பு எதிர்கால சிகிச்சைகளுக்கு ஒரு திறப்பு என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். செல் மெட்டபாலிசத்தில் வெளியான இந்த ஆய்வு குறிப்புகள், உடலுக்குள் இருந்து செயல்படும் புதிய நீரிழிவு சிகிச்சைக்கான திறவுகோலாகும்.

குடல் செயல்பாடு சீராக இல்லாவிட்டால் இன்சுலின் எதிர்ப்பு கோளாறுகள், கல்லீரல் அழுத்தம், எடை அதிகரிப்பு ஏற்படும். ஆகவே சர்க்கரை நோய்க்கு நீண்டகால தீர்வாக இருக்க வேண்டுமென குடல் சார்ந்த தீர்வுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

டொராண்டோ பல்கலைக்கழகம், பல்கலைக்கழக சுகாதார வலையமைப்பின் விஞ்ஞானிகள் தலைமையில் குடலில் இருந்து பெற்ற கலவையை அடிப்படையாகக் கொண்டு புதிய ஆராய்ச்சி நடந்தது. அதில் டி-லாக்டேட் கல்லீரல் செயல்பாடு எவ்வாறு இரத்த சர்க்கரை சீராக இருப்பதை பாதிக்கிறது என ஆராயப்பட்டது. அதிகமான டி-லாக்டேட் கொழுப்பு சேமிப்பையும், இன்சுலின் எதிர்ப்பையும் அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு மோசமாக அதிகரிக்கிறது. இதை சரிசெய்யும் விதமான 'குடல் அடி மூலக்கூறு பொறி" என்ற புதிய சிகிச்சையை உருவாக்கியுள்ளனர் கனடா விஞ்ஞானிகள். இது டி-லாக்டேட்டை கல்லீரலுக்கு செல்லும் முன் அதை கைப்பற்றி உடைத்துவிடுகிறது.

இந்த கண்டுபிடிப்புகள் சோதனை நிலையில் தான் இருக்கின்றன. இவை அறிகுறிகளை கட்டுப்படுத்தாமல், குடலில் உள்ள மூலக்கூறுகளை குறிவைத்து இரத்த சர்க்கரை அளவை மோசமாக்கும் மூலக்காரணங்களில் ஒன்றை சீராக்குகிறது. இது எலிகள் செய்யப்பட்டது போல மனித சோதனைகளிலும் முடிவுகள் வந்தால் இன்சுலின் சிகிச்சைக்கு அவசியம் இருக்காது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Lip Scrub : உதடுகளின் கருமை நிறம் மாறி 'அழகாக' வாரம் 2 முறை 'இதை' தடவுங்க
Winter Skincare : முகத்திற்கு லெமன் ஜுஸ் தடவலாமா? குளிர்கால சரும பராமரிப்பு 'இது' முக்கியம்