ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.89 மில்லியன் மக்கள் அதிக உப்பு காரணமாக இறக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
உப்பு என்பது சமையலுக்கு தேவையான ஒரு அத்தியாவசிய பொருள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழிக்கு ஏற்ப, உணவின் சுவையை உப்பு அதிகரிக்கிறது, ஆனால் அதிகளவு உப்பை உட்கொள்வதால் பல்வேறு உடல் பிரச்சனைகள் ஏற்படும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். குறிப்பாக உயர் ரத்த பிரச்சனை, இதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் அதிக உப்பு நுகர்வு காரணமாக ஏற்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.89 மில்லியன் மக்கள் அதிக உப்பு காரணமாக இறக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே, உப்பு மற்றும் சுகாதார அபாயங்கள் மற்றும் உலகளாவிய இறப்புகளுக்கு இடையே உள்ள இணைப்பு என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கோவிட்-ஐ விட கொடிய நோய் X : மற்றொரு தொற்றுநோயைச் சமாளிக்க உலகம் தயாரா? WHO குழு ஆலோசனை..
உப்பில் பரவலாக காணப்படும் சோடியம், உயிரணுக்களின் இயல்பான செயல்பாட்டை பராமரிக்க உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். பால், இறைச்சி போன்ற பல்வேறு உணவுகளிலும் இது இயற்கையாகவே காணப்படுகிறது. ஆனால் அதிக அளவு சோடியம் எடுத்துக் கொண்டால், இதய நோய், பக்கவாதம் மற்றும் அகால மரணம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று உலக சுகாதார மையத்தின் அறிக்கை கூறுகிறது.
ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் அறிக்கை, அதிகப்படியான சோடியம் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது என்று தெரிவிக்கிறது. இது இதய செயலிழப்பு அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது. ஏற்கனவே இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு இது சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
சரி, அப்படி எனில் உப்பின் பரிந்துரைக்கப்பட்ட அளவு என்ன?
பெரியவர்கள் ஒரு நாளைக்கு 2000 mg அதாவது 2 கிராம் உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. து, இது ஒரு டீஸ்பூன் குறைவாக இருக்கும். இருப்பினும், குழந்தைகளுக்கு, அவர்களின் ஆற்றல் தேவைகளுக்கு ஏற்ப அளவை சரிசெய்யலாம். உப்பின் அயோடின் ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு அவசியம் என்று WHO பரிந்துரைக்கிறது.
தினமும் லேட் நைட்டில் ஸ்நாக்ஸ் சாப்பிட்டல் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?
உப்பின் நுகர்வை எப்படி குறைப்பது?
உணவின் சுவைக்கு இடையூறு விளைவிப்பதால் உப்பைக் கைவிடுவது சாத்தியம் இல்லாத ஒன்று.. அதனால்தான் வீட்டில் சமைத்த புதிய உணவுகளை உண்ணவும், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும், உங்கள் உணவில் நீங்கள் சேர்க்கும் உப்பின் அளவைக் கண்காணிக்கவும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. சமைக்கும் போதே குறைவான அளவில் உப்பு போட்டு சமைக்கவும்.