தெற்கு சீனாவில் அமைந்துள்ள வெப்பமண்டல தீவான ஹைனானில் இதுவரை கண்டிராத 8 வைரஸ்களை சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது. கொரோனாவால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். 2-வது அலை, 3வது அலை என உலகை அச்சுறுத்திய கொரோனா பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்தது. பின்னர் உலகம் கொரோனாவில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
இந்த நிலையில் மற்றொரு அதிர்ச்சி தகவலை சீன விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். தெற்கு சீனாவில் அமைந்துள்ள வெப்பமண்டல தீவான ஹைனானில் இதுவரை கண்டிராத 8 வைரஸ்களை சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வை சீன மருத்துவ அறிவியல் அகாடமி மற்றும் பீக்கிங் யூனியன் மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்., இந்த வைரஸ்கள் கொறித்துண்ணிகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வைரஸ்கள் இனங்கள் தடையை மீறினால் மனிதர்களைத் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வரவிருக்கும் தொற்றுநோய்க்கு உலகை தயார்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட விஞ்ஞானி குழு இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
குறிப்பிடத்தக்க வகையில், கோவிட் 19 தொற்றுக்கு காரணமான SARS-CoV-2 உடன் தொடர்புடைய வைரஸ் உட்பட பல்வேறு வைரஸ்களைக் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 2017 மற்றும் 2021 க்கு இடையில் சீனாவின் ஹைனான் மாகாணத்தில் 341 கொறித்துண்ணிகளில் இருந்து எடுக்கப்பட்ட 682 மாதிரிகளில் இந்த வைரஸ்களை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இதுகுறித்து நிபுணர் ஒருவர் பேசிய போது "ஹைனானில் வசிக்கும் கொறித்துண்ணிகளிடமிருந்து 700-க்கும் மேற்பட்ட மாதிரிகளை நாங்கள் ஆய்வு செய்தோம், மேலும் 8 வைரஸ்களைக் கண்டறிந்தோம். வைரஸ்களில் ஒன்று, கோவிட்-19-ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸின் அதே குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ்கள் கொறித்துண்ணிகளில் காணப்பட்டன, இந்த வைரஸ் எப்போதாவது பரவத்தொடங்கினால் மனிதர்களை அதிகமாக பாதிக்கும் வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களில், ஒன்று CoV-HMU-1 எனப்படும் புதிய கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டது, இது கோவிட்-க்கு காரணமான அதே குழுவைச் சேர்ந்தது. கூடுதலாக, பல புதிய நோய்க்கிருமிகள் வெவ்வேறு வைரஸ் வகைகளில் கண்டறியப்பட்டன:
உலக பக்கவாதம் தினம் 2023: பக்கவாதம் ஏற்பட என்ன காரணம்? அறிகுறிகள் என்னென்ன?
விஞ்ஞானிகள் கண்டுபிடித்த வைரஸ்கள் என்னென்ன?
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் தங்கள் அறிக்கையில்“ வைரஸ் வகைகள் மற்றும் தோற்றம் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அணுக முடியாத பகுதிகளில் உருவாகியுள்ள மிகவும் மாறுபட்ட, கண்டுபிடிக்கப்படாத வைரஸ்கள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் பரிந்துரைக்கின்றன" என்று தெரிவித்தனர்,