தென்னிந்திய உணவுகளில் முள்ளங்கி தனியிடம் உண்டும். பொதுவாக சாம்பாரில் பயன்படுத்தப்படும் முள்ளங்கியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால் இதன் சாற்றை பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கு பயன்படுத்தலாம்.
குளிர்காலத்தில் பல வகையான பச்சை இலை காய்கறிகள் கிடைக்கும். அவை குறிப்பிட்ட கால்நிலைக்கு ஏற்ப மனித உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கும். அதை சமைத்து உட்கொள்வதன் மூலம் பல நோய் பாதிப்புகளை தவிர்க்க முடியும். குறிப்பிட்ட பச்சை இலைக் காய்கறிகளில் முள்ளங்கியில் பல்வேறு நன்மைகள் இடம்பெற்றுள்ளன. அதனுடைய இலைகளையும் சாப்பிடுவதும், பல்வேறு உடல்நலனுக்கு வழிவகுக்கிறது. முள்ளங்கி இலையில் வைட்டமின்-சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதனுடைய இலை சாற்றின் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
செரிமானம் சீராகும்
undefined
முள்ளங்கி இலையில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. உங்களுக்கு செரிமானப் பிரச்னை இருந்தால், அதை போக்குவதற்கு முள்ளங்கி இலைச்சாற்றை தினசரி சாப்பிடலாம். ஆனால் அதை எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதை ஒரு நிபுணரிடம் தெரிந்து கொள்வது நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி
முள்ளங்கி இலைகளில் பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் பல நோய்களை தவிர்க்க முடியும் என மருத்துவ ஆதாரங்கள் கூறுகின்றன.
மொச்சைப் பயிறுகளில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!
ரத்த அழுத்தத்தை போக்கும்
குறைந்த ரத்த அழுத்தப் பிரச்னை கொண்டவர்களுக்கு, முள்ளங்கி இலைச்சாறு பல்வேறு வகையில் பயனுள்ளதாக அமைகிறது. அதன்மூலம் கிடைக்கும் சோடியம் குறைந்த ரத்த அழுத்தப் பிரச்னையை சமன் செய்கிறது. இதனால் மருத்துவர் அறிவுரையுடன் நீங்கள் முள்ளங்கி இலைச் சாற்றை சாப்பிட்டு வரலாம்.
எடை குறைப்பு
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், முள்ளங்கி இலைகள் சரியான தேர்வாகும். குளிர்காலத்தில் நாம் பெரும்பாலும் செயலற்ற நிலையில் இருப்போம் மற்றும் விரைவாக உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. இந்த நேரத்தில் நீங்கள் தினசரி உணவில் முள்ளங்கி இலை சாற்றை சேர்க்கலாம். இதன்மூலம் பசி கட்டுக்குள் இருக்கும் மற்றும் எடை குறையவும் வாய்ப்புள்ளது.
முள்ளங்கி இலைச் சாற்றை தயாரிப்பது எப்படி?
முதலில் முள்ளங்கி இலைகளை கழுவவும். பின்னர் இலைகளை சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். அதையடுத்து மிக்ஸியில் அரைத்து, அதனுடன் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் ஒரு சிட்டிகை மிளகுத் தூள் சேர்க்க வேண்டும். அவ்வளவுதான், முள்ளங்கிச் சாற்றை எளிதாக தயாரித்து விடலாம்.