ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் மற்றும் ஹார்மோன் தொந்தரவுகள் காரணமாக கருத்தரிப்பதில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். இதை தான் PCOS பிரச்னை என்று வரையறுக்கப்படுகிறது. இதற்கான அறிகுறிகள் என்பது பெண்ணுக்கு பெண் மாறுபடும். இருப்பினும் ஒழுங்கற்ற மாதவிடாய், எடை அதிகரிப்பு, முகப்பரு, அதிகப்படியான முடி வளர்ச்சி மற்றும் முடி உதிர்தல் போன்றவை PCOS பாதிப்புக்கான பொதுவான அறிகுறிகளாகும்.
பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்பது ஒரு ஹார்மோன் நிலை சார்ந்த பிரச்னையாகும். இது இனப்பெருக்க வயதுடைய பெண்களில் 5-10% பேரை பாதிக்கிறது. பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு பெரும்பாலும் ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் மற்றும் கருப்பையில் பல நீர்க்கட்டிகள் உருவாகுதல் போன்ற பிரச்னைகள் இருக்கும். இந்த அறிகுறிகளுக்கு மேலதிகமாக, PCOS உடைய பெண்கள் எடை அதிகரிப்பு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உடல் வீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளையும் எதிர்கொள்ள நேரிடும். PCOS உள்ள பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் மற்றும் ஹார்மோன் தொந்தரவுகள் காரணமாக கருத்தரிப்பதில் சில சிரமங்களை சந்திக்கின்றனர். PCOS அறிகுறிகள் பெண்ணுக்குப் பெண் மாறுபடும். இருப்பினும், அவை ஒழுங்கற்ற மாதவிடாய், எடை அதிகரிப்பு, முகப்பரு, அதிகப்படியான முடி வளர்ச்சி மற்றும் முடி உதிர்தல் போன்றவை பொதுவான அறிகுறிகளாக குறிப்பிடப்படுகின்றன.
பிசிஓஎஸ் சிகிச்சைக்கு சமச்சீர் உணவு மிக முக்கியமான வழிகளில் ஒன்றாகும். சில உணவுகள் PCOS அறிகுறிகளை மோசமாக்கும். ஒரு பெண் பாலிசிஸ்டிக் கருப்பை நோயை உருவாக்குவதற்கு பல காரணங்கள் உள்ளன. பொதுவான காரணங்கள் கடுமையான நீண்ட கால மன அழுத்தம், ஹார்மோன் மருந்துகளின் வழக்கமான பயன்பாடு மற்றும் பரம்பரை நீரிழிவு ஆகியவையாக இருக்கலாம். இந்த பாதிப்பு கொண்ட பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
undefined
உணவை சேமிக்க பிளாஸ்டிக் கொள்கலன்களைப் பயன்படுத்த வேண்டாம்; ஏன் தெரியுமா?
கொழுப்பு கொண்ட உணவுகள்
துரித உணவுகள், உறைந்த உணவுகள் மற்றும் தொகுக்கப்பட்ட சிற்றுண்டிகளில் சர்க்கரை, உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உள்ளன. செயற்கை சுவையூட்டிகளில் பல்வேறு உடல்நலன் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. இது வீக்கம் மற்றும் இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கும். PCOS உள்ள பெண்கள் குறிப்பிட்ட இந்த உணவுகளை நிச்சயமாக தவிர்த்திட வேண்டும்.
பழச்சாறு வேண்டாம்
சோடாக்கள், பழச்சாறுகள் மற்றும் பிற சர்க்கரை பானங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். இது இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கிறது. PCOS-யால் பாதிக்கப்பட்ட பெண்கள் மூலிகை தேநீர் அல்லது தேங்காய் தண்ணீர் குடிக்கலாம்.
கிளைசெமிக் குறியீடு முக்கியம்
வெள்ளை ரொட்டி, பாஸ்தா மற்றும் அரிசி போன்ற உயர் கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யலாம். PCOS உள்ள பெண்கள் நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்களைத் தேர்வு செய்ய வேண்டும் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
சோயா பொருட்கள்
சோயா பொருட்களில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. இது PCOS பெண்களில் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும். PCOS உள்ள பெண்கள் டோஃபு மற்றும் சோயா பால் போன்ற சோயா பொருட்களை தவிர்ப்பது நல்லது. இது ஹார்மோன் சமநிலையை பாதிப்பது மட்டுமின்றி, வெவ்வேறு பிரச்னைகளையும் ஏற்படுத்தக் கூடும்.