நெல்லிக்காயை குறித்து நம்முடைய தமிழ் இதிகாசங்களில் கூட பல்வேறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட நெல்லியை, சில உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மனித உடல் ஆரோக்கியத்துக்கு பல்வேறு வகையில் நன்மை சேர்க்கும் உணவுப் பொருட்களில் முதன்மையானது நெல்லிக்கனி. இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை தினமும் சாப்பிட்டு வந்தால் கண்கள் நன்றாக இருக்கும், கண் பிரச்னை உள்ளவர்கள் விரைவில் குணமடைவார்கள். முடி உதிர்தலையும் குறைக்கிறது. நெல்லிக்காய் முடியை வலிமையாக்கும். கேசத்தை கருப்பாகவும் மாற்றும். இதில் அத்தியாவசமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. உடலில் இருக்கும் இறந்துபோன சரும செல்களை நீக்குகின்றன. அதேசமயத்தில் உடலில் புதிய செல்களை உருவாக்கவும் உதவுகிறது. நெல்லிக்காயை வைத்து ஃபேஸ் பேக் போட்டால் முகம் பளபளக்கும். கருப்பு புள்ளிகள் அகற்றப்படும். சுருக்கங்கள் குறையும். தோல் இளமையுடன் இருக்கும்.
எதிர்ப்பு சக்தி
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் உதவுகிறது. இதை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் பிரச்னை நீங்குகிறது. கல்லீரலில் சேரும் நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது. தினமும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் மஞ்சள் காமாலை அபாயம் குறைக்கின்றன. பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட இந்த உணவுப் பொருளை, குறிப்பிட்ட நோய் பாதிப்புகளை கொண்டவர்கள் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
உடலின் இந்த பகுதிகளில் கொழுப்பு சேர விட்றாதீங்க..!! அப்பறம் வருத்தப்படுவீங்க..!!
சளித் தொந்தரவு
குளிர்காலத்தில் பலருக்கும் சளிப் பிடித்துவிடும். பொதுவாக நெல்லிக்காய் குளிர்ச்சியானது. அதை குளிர்காலத்தில் சாப்பிட்டால், ஏற்கனவே சளிப் பிரச்னை கொண்டவர்களுக்கு, மேலும் பாதிப்பு அதிகமாகும். அதனால்தான் ஜலதோஷம் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லிக்காயை சாப்பிடக்கூடாது. உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போதும் இதை சாப்பிட்டால் உடல் வெப்பம் இன்னும் குறையும். அதனால் உடல்நைலை சரியில்லாத போது, இதை யாரும் சாப்பிடக்கூடாது.
குறைந்த இரத்த சர்க்கரை
ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்கள் நெல்லிக்கனியை சாப்பிடக்கூடாது. மேலும் இரத்தத்தில் சர்க்கரை அளவு மிகக் குறைவாக உள்ளவர்கள், நெல்லியை நினைத்துப் பார்க்கவே கூடாது. இதை சாப்பிட்டால் உடல் நலம் மேலும் கெடும். நெல்லிக் கனி உங்கள் இரத்த சர்க்கரை அளவை மேலும் குறைக்கலாம். அதனால் நெல்லிக்காய் மட்டுமல்ல, தேனில் கலந்த நெல்லிக்காயையும் இந்த பாதிப்பு கொண்டவர்கள் சாப்பிடவேக் கூடாது.
மாதவிடாய் ஏற்படும் போது யோகா செய்யலாமா?
சிறுநீரக நோயாளிகள்
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூட நெல்லிக்காயை சாப்பிடவே கூடாது. ஏனெனில் நெல்லிக்காயை சாப்பிடுவதால் உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கிறது. இது சிறுநீரகங்களை வடிகட்டுவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதனால் சிறுநீரகம் செயலிழந்து போகும் அளவுக்கு ஆபத்து அதிகரித்துவிடும்.
குறைந்த இரத்த அழுத்தம்
மிகக் குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களும் நெல்லிக்காய் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் சிறிதளவு சாப்பிட வேண்டும். நெல்லிக்காயை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் கணிசமாகக் குறைக்கும். வேறுஏதாவது ஆபத்தான பிரச்னைகள் ஏற்படும் அபாயமும் இதனால் அதிகரிக்கிறது.