பக்கவாதம் பாதித்த நபர்கள் விரைவில் குணமடையும் வகையில் புதிய சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நம்முடைய மூளையில் ஏதேனும் ஒரு புறம் ரத்த ஓட்டம் சரியாக இல்லாமல் குறைந்து, முற்றிலும் செயல்படாமல் இருக்கும்போது உடலுடைய மற்றொரு பக்கத்தில் கை, கால், முகத்தின் ஒரு பகுதியும் செயலற்று போவதை பக்கவாதம் என்பார்கள். இந்த நோய் ஏற்பட உயர் ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இந்த நோயை விரைவில் குணமடைய செய்ய தற்போது புதிய சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட இரசாயனம் கொண்ட சொட்டு மருந்து ( Nasal Drops Treatment) சிகிச்சை பக்கவாதத்தின் தீமை செய்யும் பாதிப்பிலிருந்து உதவும். இதனை எலிகளிடம் சோதித்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது மனிதர்களின் வருங்கால சிகிச்சைக்கு பொருந்தக்கூடிய தன்மை குறித்து ஆராய்ச்சியாளர்கள் இப்போது நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
undefined
கோதன்பர்க் பல்கலைக்கழகத்தின் (University of Gothenburg) ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் இன்வெஸ்டிகேஷன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் இது குறித்து பேசப்பட்டுள்ளது. இதில் ஆராய்ச்சியாளர்கள் எலிகள் மீது சோதனை செய்துள்ளனர். பக்கவாத சிகிச்சைக்கு இணையான சோதனையை 'செக் அகாடமி ஆஃப் சயின்ஸின்' ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் எலிகளுக்கு பெப்டைட் C3a ( peptide C3a) மூலக்கூறு, சொட்டுகளில் கொடுக்கப்பட்டது. இந்த சிகிச்சையை மேற்கொண்ட எலிகள் மற்ற எலிகளுடன் ஒப்பிடும்போது, பக்கவாதத்திற்குப் பிறகு வேகமாகவும் சிறப்பாகவும் தங்கள் செயல்பாட்டை மீட்டெடுப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். ஸ்வீடன், ஜெர்மனியில் செய்யப்பட்ட சோதனைகளில் அதே நேர்மறையான விளைவுகள் காணப்பட்டது. இந்த முறையினால், இரத்த உறைவால் பக்கவாதம் ஏற்பட்ட நோயாளிகளுக்கு பலன் கிடைக்கும்.
த்ரோம்போலிசிஸ் அல்லது த்ரோம்பெக்டோமிக் பாதித்து மிகவும் தாமதமாக மருத்துவமனைக்கு வருபவர்களுக்கும் இந்த சிகிச்சை உதவும். இரத்த உறைவு நீக்கம் செய்த பிறகு மீதமுள்ள குறைபாடுகள் உள்ளவர்கள் இந்த சிகிச்சையின் மூலம் உடல்நலத்தில் முன்னேற்றம் அடையலாம். இந்த முடிவுகள் கோதன்பர்க் பல்கலைக்கழகத்தில் முந்தைய ஆய்வு முடிவுகளை உறுதிப்படுத்துகின்றன. மேலும் இதில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: எதை சாப்பிட்டாலும் இப்படி ஆகுதா?உணவு அலர்ஜி Vs உணவு சகிப்புத்தன்மை... எந்த பிரச்சினை காரணம்?