Year Ender 2022 : 2022ம் ஆண்டில் கூகுளில் தேடப்பட்ட நோய்கள் என்னென்ன தெரியுமா.?

By Raghupati R  |  First Published Dec 20, 2022, 4:00 PM IST

கூகுளில் அதிகம் தேடப்பட்ட நோய்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.


உலகம் முழுவதும் கோடிக்கணக்கான அதிக யூஸர்களால் பயன்படுத்தப்படும் முன்னணி சர்ச் என்ஜினாக இருக்கிறது கூகுள். வருடந்தோறும் இயர் இன் சர்ச் அறிக்கையை கூகுள் வெளியிடும். அந்த வகையில் இயர் இன் சர்ச் 2022 அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி கூகுளில் அதிகம் தேடப்பட்ட நோய்கள் பற்றி தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா (கோவிட்-19) 

Tap to resize

Latest Videos

கொரோனா என்ற கோவிட்-19 தொற்றுநோய் உலகம் முழுவதும் உலுக்கியது.  கோவிட்-19 சீனாவின் வுஹான் மாகாணத்தில் 2019 இல் தொடங்கியது. அதன்பிறகு உலகம் முழுவதும் தொற்றுநோய் வேகமாகப் பரவியது. 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பரவி, ஆட்டத்தை காட்டியது. ஆனால் இந்த ஆண்டு கோவிட் மட்டுமின்றி மற்ற நோய்களும் பரவ ஆரம்பித்தன.

குரங்கம்மை

2022 ஆம் ஆண்டில் குரங்கம்மை மிகவும் ஆபத்தான நோயாக மாறியது. இது பெரியம்மை வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். மனிதர்களில் குரங்கம்மை 1970 ஆம் ஆண்டு இது கண்டறியப்பட்டது. ஆனால் 2022 வாக்கில் இது பல நாடுகளுக்கு வேகமாக பரவி ஆயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்தியது. இந்த நோய் இந்த ஆண்டு பலரின் ஆரோக்கியத்தை பாதித்தது.

தக்காளி காய்ச்சல்

இந்த ஆண்டு, தக்காளி காய்ச்சல் என்ற நோய் இந்தியாவிலும் அழிவை ஏற்படுத்தியது. இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அவ்வப்போது வந்து அச்சறுத்தியது. அவை உயிருக்கு ஆபத்தானவை. கோவிட்-19 காரணமாக, சுகாதார அமைப்பின் இருப்பு நோயைத் தடுக்க உதவியது.

இதையும் படிங்க..செலவே இல்லாமல் சுற்றுலா செல்ல வேண்டுமா.? நீங்க வந்தா மட்டும் போதும்! - இந்த நாடு பற்றி தெரியுமா உங்களுக்கு?

ஜப்பானிய மூளைக்காய்ச்சல்

2020 ஆம் ஆண்டில், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய் மீண்டும் பரவத் தொடங்கியது. இது ஒரு தீவிர தொற்று ஆகும், இது பொதுவாக மூளையின் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. மார்ச் 4, 2022 அன்று, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வேகமாகப் பரவுவதாக அறிவிக்கப்பட்டது.

X -எக்ஸ்

X நோய் என்பது யாரும் புரிந்து கொள்ளாத இந்த ஆண்டின் நோயாகும். உலக சுகாதார அமைப்பு கூட இந்த நோய்க்கு பயந்தது. உலக சுகாதார நிறுவன கூற்றுப்படி, X வைரஸ் எதிர்காலத்தில் கொரோனா போன்ற தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்.

தட்டம்மை

இந்த ஆண்டு மீண்டும் தட்டம்மை நோய் அதிகரித்தது. அமெரிக்காவில் உள்ள ஓஹியோவில் இளம் குழந்தைகளுக்கு தட்டம்மை வேகமாக பரவியது. இந்தியாவின் சுகாதார அமைப்பு இந்த ஆண்டு அதிகரித்த நோய்களில் தட்டம்மையும் ஒன்று என்று கூறியிருந்தது.

பெரும்பாலான உயிருக்கு ஆபத்தான நோய்கள்

தட்டம்மை அல்லது தக்காளி காய்ச்சலாக இருந்தாலும், இந்த நோய்கள் அனைத்தும் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மரணத்தை ஏற்படுத்தும். ஆனால், இந்த ஆண்டு உலகில் எந்த ஒரு நோய் தாக்குதலாலும் இறப்புகள் வரும்போது, ​​குரங்கம்மை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சின்னம்மை போன்ற கொடிய நோய்தான் குரங்கு. உலக சுகாதார நிறுவன அறிக்கைகளின்படி, ஜனவரி 1 மற்றும் அக்டோபர் 2 க்கு இடையில் 68,900 குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க..அப்போ இருந்த இலங்கை போராட்ட களமா இது.? அனைவரையும் ஆச்சரியப்படுத்திய வைரல் புகைப்படம் !!

click me!