சூப்பரான "கல்மி கபாப்" சமைக்கலாம் வாங்க!

By Dinesh TGFirst Published Dec 19, 2022, 8:59 PM IST
Highlights

கல்மி கபாப் சுவையாக வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. வீட்டில் வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு என்ன ரெசிபிஸ் செய்யலாம் என்று பிளான் பண்ணிட்டு இருப்பீர்கள். வழக்கமாக செய்கின்ற உணவுகளை செய்யாமல் சற்று வித்தியாசமாக ஏதேனும் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். 

சிக்கன் வைத்து பல விதமான ரெசிபிக்களை செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் அசத்தலான கல்மி கபாப் ரெசிபியை காண உள்ளோம். இதனை இந்த கிறிஸ்துமஸ்க்கு உங்கள் விருந்தினர்களுக்கு செய்து கொடுத்து உபசரியுங்கள். 

வழக்கமாக கல்மி கபாபை நம்மில் பலரும் வெளியில் தான் வாங்கி சுவைத்து இருப்போம். இதனை நாமே சுவையாக வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
லவங்கம் - 3
வெங்காய விதை - 1/2 ஸ்பூன்
பட்டை - 1
பிரியாணி இலை - 1
மிளகு - 5
தயிர் - 1 கப்
மைதா - 1/4 கப்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
லெமன் ஜூஸ் - 1 ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் வீட்டில்லேயே செய்து கொண்டாடலாம் வாங்க!

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு வாணலி வைத்து எண்ணெய் சேர்க்காமல் லவங்கம், பிரியாணி இலை ,பட்டை, வெங்காய விதை, மிளகு ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஆற வைத்து விட்டு மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிக்கன் பீஸ்களை நன்கு சுத்தம் செய்து விட்டு, அதனை தண்ணீரில் அலசி விட்டு லைட்டாக ஆங்காங்கு கீறி விட வேண்டும்.

ஒரு கிண்ணத்தில் மைதா சேர்த்துக் கொண்டு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், குங்குமப்பூ, எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து ஒரு முறை கிளறி விட வேண்டும். பின் அந்த கலவையில் சிக்கன் பீஸ்களை சேர்த்து ஒரு முறை பிரட்டி விட்டு சுமார் 1/2 மணி நேரம் வரை ஊற வைத்து விட வேண்டும். பின் க்ரில் கம்பியில் சிக்கன் பீஸ்களை சொருகி நெருப்பில் காட்டி வாட்டி எடுக்க வேண்டும். 

அவ்ளோதான்! சுவையான கல்மி கபாப் ரெடி!!! இதனை இந்த கிறிஸ்துமஸ்க்கு செய்து உங்கள் அன்பானவர்களுக்கு பரிமாறி உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்!

click me!