முடி உதிர்வதற்கு வியர்வை மற்றொரு முக்கிய காரணம் என்பது பலருக்கும் தெரியாது. வியர்வை என்பது தண்ணீர் மட்டுமின்றி, அதனுடன் நமது உடலின் உருவாகும் எண்ணெய்யும் இடம்பெற்றிருக்கும். இதனால் மயிர்க்கால்கள் அடைக்கப்பட்டு, முடி உதிர்வு ஏற்படுகிறது.
முடி உதிர்தல் என்பது ஆண்கள் மற்றும் பெண்களிடையே காணப்படும் பொதுவான பிரச்னையாகும். இதற்கு பர்மபரை தோன்றல், ஹார்மோன் சமநிலையின்மை, உச்சந்தலையில் தொற்று, மன அழுத்தம் மற்றும் மருந்து உட்கொள்ளல் போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன. முடி உதிர்வதற்கு வியர்வை மற்றொரு முக்கிய காரணம் என்பது பலருக்குத் தெரியாது.
வியர்வோடு வழியும் உடல் எண்ணெய் மயிர்க்கால்களை அடைத்துவிடுகிறது. இதனால் முடி வளர்ச்சி தடைப்பட்டு, முடி உதிர்தல் ஏற்படுகிறது. அடிப்படையில் வியர்வையில் உப்பு உள்ளது. இது நம் முடிக்கும், உச்சந்தலைக்கும் நல்லதல்ல. அதிகப்படியான வியர்வை ஏற்படுகையில், முடியில் உப்புத்தன்மை சேர்ந்துவிடுகிறது. இதனால் வறட்சி ஏற்பட்டு முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது.
undefined
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இயற்கையாகவே அதிகளவில் வியர்வை வரும். அப்போது வியர்வோடு வடியும் எண்ணெய் மயிர்க்கால்களை அடைத்துவிடும். இதையடுத்து முடி உதிர்தல் ஏற்படும். உச்சந்தலையில் வியர்வை தேங்கினாலும் முடி உதிரும். மோசமான உணவு முறை மற்றும் சுகாதாரமின்மை உள்ளிட்ட பழக்கம் காரணமாகவும் முடி உதிர்வு ஏற்படும்.
உடலின் இந்த பகுதிகளில் கொழுப்பு சேர விட்றாதீங்க..!! அப்பறம் வருத்தப்படுவீங்க..!!
அதிகப்படியான ரசாயனம் கொண்ட ஷாம்புக்களில், அதிக தீங்கை ஏற்படுத்தும் பொருட்கள் இருக்கும். அதை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது, முடி உதிர்வு உருவாகக்கூடும். அதற்கு பதிலாக குறைந்த அமிலத்தன்மை கொண்ட ஷாம்பூக்களை பயன்படுத்த துவங்குங்கள். இதனால் முடி உதிர்தல் பிரச்னை கட்டுக்குள் வரும். குறைந்தது உங்களது தலைமுடியை வாரத்திற்கு 2-3 முறை கழுவ வேண்டும்.
வெதுவெதுப்பான எண்ணெயைக் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்வது முடி உதிர்வைக் குறைத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதேபோன்று சுடு தண்ணீரில் குளிக்கும் போது, தண்ணீர் வெதுவெதுப்பான அளவில் இருப்பது நன்மையை தரும். முடி உதிர்வதைத் தடுக்க போதுமான அளவு அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். அதற்காக ஒருநாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
மனதளவில் ஏற்படும் பிரச்னை காரணமாகவும் முடி உதிர்வு ஏற்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் உணவுப் பழக்கம், பரம்பரை தோன்றல் உள்ளிட்ட காரணங்களுக்கு மனநிலைப் பிரச்னையால் அதிகம் பேருக்கு முடி உதிர்தல் ஏற்படுகிறது. அதை குறைக்க தியானம் மற்றும் சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் யோகா பயிற்சு மேற்கொள்வதும் நல்ல பலனை தரும்.