ஆணுறையை விட கருத்தடைக்கு 95% வரை பலன் தரும் பெண்ணுறைகள்..!!

By Dinesh TG  |  First Published Dec 3, 2022, 1:41 PM IST

ஆணுறை குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் ஆணுறை போன்றே, பெண்ணுறை என்கிற கருத்தடை சாதனம் உள்ளது. அதுதொடர்பான பயன்பாடு குறித்து விரிவாக பார்க்கலாம்.
 


இந்த தலைப்பை பார்த்துவிட்டு, கட்டுரையை படிக்க வந்த பலரும் இப்போதுதான் பெண்ணுறை என்கிற சொல்லை கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் ஆணுறை போன்று இதுவும் கருத்தடை சாதனமாகவே பயன்படுகிறது. அதாவது, ஆணுறையால் ஏற்படும் கருத்தடைக்கான வாய்ப்பு 70 முதல் 75% வரை மட்டுமே. ஆனால் பெண்ணுறை மூலம் 80 முதல் 85% வரை கருத்தடைக்கான வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஆணுறை போன்று, பெண்ணுறையும் லேடக்ஸ் இல்லாத ரப்பரால் செய்யப்பட்டது தான். இதனுடைய இரு முனைகளிலும் நெகிழ்வான வளையங்கள் இருக்கும். உடலுறவுகொள்ளும் போது, இதை பெண்ணுறுப்புக்குள் செலுத்த வேண்டும். இதன்மூலம் பெண்ணுறுப்புக்குள் நலிர்ந்துபோய், விந்து மற்றும் பிற திரவங்கள் உட்புகாமல் பார்த்துக்கொள்கிறது. இதுதான் பெண்ணுறையின் முக்கிய பயன்பாடாகும்.

Latest Videos

இந்தியாவில் மாதவிடாயின் போது அணையாடைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோன்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் டேம்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதை எப்படி பயன்படுத்துகிறோமோ, அதே போன்று தான் பெண்ணுறையையும் பயன்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் இதை உபயோகிக்கும் போது சில குழப்பங்கள் இருக்கலாம். ஆனால் அது நாட்கள் செல்லச் செல்ல பழக்கமாகிவிடும்.

உடலின் இந்த பகுதிகளில் கொழுப்பு சேர விட்றாதீங்க..!! அப்பறம் வருத்தப்படுவீங்க..!!

ஆணுறையை போன்று, ஒவ்வொரு உடலுறவின் போதும் புதிய புதிய பெண்ணுறையை தான் பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே பயன்படுத்திய பெண்ணுறையை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. உடலுறவு தொடங்குவதற்கு முன்பே, பெண்ணுறையை பெண்ணுறுப்பில் வைத்துவிட வேண்டும். உங்களிடம் விந்துகொல்லி அல்லது லூப் இருந்தால், அதை முனையில் தடவலாம். இதை உட்கார்ந்துக் கொண்டு அல்லது சம்மணமிட்டு போட முடியாது. எழுந்து நேராக நின்றால் மட்டுமே பெண்ணுறையை போட்டுக்கொள்ள முடியும்.

இருமுனைகளில் ஒரு முனையை பிடித்து திருகிவிட வேண்டும். அதை பெண்ணுறுப்பில் அப்படியே சொருக வேண்டும். எவ்வளவு தூரம் செல்கிறதோ, அவ்வளவு தூரம் உள்ளே செலுத்த வேண்டும். அதனுடைய மறுமுனை பிறப்புறுப்பின் வெளியே தெரியவேண்டும். ஆணுறையை விடவும் கருத்தடைக்கு இது சிறந்தமுறையில் பயன் தருகின்றன. குறிப்பாக, பெண்ணுறை 80 முதல் 85 சதவீதம் வரை கருத்தடை ஏற்படாமல் பாதுகாக்குகிறது. ஒருசில ஆய்வுகளில் 95 சதவீதம் வரை பயன் தருவதாக தெரியவந்துள்ளது. 

ஆனால் இதை சரியாக பயன்படுத்த தெரியவில்லை என்றால், கருவுறுதல் ஏற்பட்டுவிடும். அதேசமயத்தில் இது பாலியல் நோய்த் தொற்றுக்கான பாதிப்பையும் குறைக்கிறது. இன்றும் பலராலும் பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறைக்கு தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால் ஆணுறையை பயன்படுத்த விரும்பாத காதலர்கள் / இணையர்கள் பெண்ணுறைக்கு முக்கியத்துவம் தருவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.

ஆணுறையை போன்று உடலுறவு ஏற்படும் போது பெண்ணுறையை பொருத்த வேண்டும் என்கிற விதி கிடையாது. ஒரு பெண்ணுறையை 8 மணிநேரம் வரை அணிந்திருக்கலாம். அதனால் உடலுறவின் போதுதான், இதை எடுத்து பிறப்புறுப்பில் பொருத்திக்கொள்ள வேண்டும் என்கிற அவசரம் இல்லை. ஆனால் எப்போதும் உறவு கொண்டாலும், உடனடியாக பெண்ணுறப்பை நீக்கிவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!