குறைந்த விலையில் நிறைந்த நன்மைகள் தரும் மத்தி மீனின் அற்புதங்கள்…

 
Published : Oct 09, 2017, 01:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
குறைந்த விலையில் நிறைந்த நன்மைகள் தரும் மத்தி மீனின் அற்புதங்கள்…

சுருக்கம்

Minimally rewarded benefits

மற்ற மீன்களோடு ஒப்பிடுகையில் மத்தி மீனின் விலை மிகவும் குறைவு. 2000-களில் கிலோ ஐந்து, பத்து ரூபாய்க்கு கூட மத்தி மீன் கிடைத்தது. குறைந்த விலையில் நிறைந்த நலன்களை தருவது மத்தி மீன்.

கண், இதயம், நீரிழிவு, எலும்பின் வலிமை என உடல் முழுக்க பல நலனை தருகிறது மத்தி மீன்.

உங்கள் உணவுப் பழக்கத்தில் மத்தி மீனை சேர்த்துக் கொள்வதால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. வேறு என்னவெல்லாம் நன்மைகளை தரும் என்று தெரிஞ்சுக்குங்க…

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் மத்தி மீன் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாகி, இரத்தத்தில் இருக்கும் சர்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டவர முடியும்.

எலும்புகள் வலிமையடையும்

மத்தி மீனில் இருக்கும் கால்சியம் சத்து எலும்புகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் நல்ல பலனளிக்கிறது.

இதய பாதிப்பை குறைக்கும்

மத்தி மீனில் இருக்கும் வைட்டமின் பி 12 உடலில் இருக்கும் ஹோமோசைஸ்டீன் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்கள் பாதிப்படைவதை தடுக்கிறது.

முன் கழுத்துகழலை நோய்

மத்தி மீனில் இருக்கும் அயோடின் தாதுசத்து முன் கழுத்துகழலை நோய் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது.

கால்சியம் மாத்திரைகள்

மத்தி மீனில் செல்களில் இருந்து தான் கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மாத்திரைகளை சாப்பிடுபவர்களுக்கு சருமம் பளிச்சிடும்.

கண்பார்வை அதிகரிக்கும்

மத்திமீனை உணவில் சேர்த்துக் கொள்வதால் கண்பார்வை குறைபாடுகள் நீங்கி. பார்வை திறன் அதிகரிக்கும்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க