உடல் எடையை குறைக்க தேன்+மிளகாய் காம்பினேஷனில் வித்தியாசமான ப்ரூட் சாலட்…

First Published Oct 9, 2017, 1:29 PM IST
Highlights
Weight loss in weight plus chilly salad


உடல் எடையைக் குறைக்க உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் குறைவான கொழுப்பு உணவு தேவை. அதற்கு, ப்ரூட் சாலட் உங்களுக்கான ஒரு அற்புதமான தேர்வாகும்.

உங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட பழங்களை சாப்பிட பிடிக்கவில்லை என்றால், ஒரு கிண்ணம் முழுவதும் ப்ரூட் சாலட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் உங்களுக்கு ஒரு ஆச்சர்யம் தரும் வகையில் ஒரு வித்தியாசமான முறையில் ப்ரூட் சாலட் தயாரிக்கும் செய்முறை டிரை பண்ணலாம்.

மிகவும் வித்தியாசமான முறையில் ப்ரூட் சாலட் தேன் மற்றும் மிளகாய் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த வித்தியாசமான ப்ரூட் சாலட்டை செய்யும் முறை

பரிமாறும் அளவு – ஒரு கிண்ணம் தயாரிப்பு நேரம் – 20 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:

நறுக்கிய அன்னாசி – ½ கப்

ஆரஞ்சு – 1

பேரிக்காய் – 1

அக்ரூட் பருப்புகள் – கால் கப் (மசித்தது)

லோல்லோ ரோஸ்ஸோ கீரை இலைகள் – 4

தேன் – 2 டீஸ்பூன்

எலுமிச்சை தோல் துறுவல் – 1 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் – 1

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

கருப்பு மிளகு – சுவைக்கு தகுந்த படி

உப்பு – தேவையான அளவு

அலங்கரிக்க செய்ய வேண்டிய செய்முறை :

சிவப்பு மிளகாயை நீளவாக்கில் நடுவாக வெட்டி அதில் உள்ள மிளகாய் விதைகளை நீக்கி மிளகாயின் காரத்தை குறைக்க வேண்டும்.

மிளகாயை சிறு துண்டுகளாக வெட்டி அதை ஒரு கிண்ணத்திற்கு மாற்ற வேண்டும். அதன் பின்னர் அதில் தேன் சேர்க்க வேண்டும்.

அதன் பின்னர் அதில் எலுமிச்சை தோல் துறுவலை சேர்க்க வேண்டும். அதனுடன் உப்பு மற்றும் நொறுக்கப்பட்ட கருப்பு மிளகை சேர்த்து அனைத்தையும் நன்கு கலக்க வேண்டும்.

சாலட் செய்முறை:

ஒரு அடுப்பில் கடாயை வைத்து அதில் அக்ரூட் பருப்புகளைப் போட்டு நன்கு சூடாக்க வேண்டும். பருப்புகள் நன்கு வறுபட்டவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

அன்னாசி, பேரிக்காய், ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு, ஆகிய அனைத்து பழங்களையும் உங்கள் விருப்பம் படி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பெரிய கிண்ணத்தில் அனைத்து பழங்களையும் எடுத்து அதன் மீது நீங்கள் முன்பு அலங்கரிக்க தயார் செய்து வைத்துள்ள அனைத்தையும் சேர்க்க வேண்டும்.

ஒரு பரிமாறும் தட்டை எடுத்து அதில் கீரையை விரித்து அதன் மீது பழங்களைப் பரப்பி அதன் மீது இறுதியாக சில வறுக்கப்பட்ட அக்ரூட் பருப்புகள் போன்றவற்றை வைத்து அழகுபடுத்த வேண்டும்.

உங்களின் சுவை மிகுந்த தேன் மற்றும் மிளகாய் வைத்து அலங்கரிக்கப்ட்ட ப்ரூட் சாலட் பறிமாறத் தயாராக உள்ளது.

click me!