பொதுவாக கோழி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியை விட, உலகில் அதிகம் பேரால் விரும்பி உண்ணப்படுவது மாட்டிறைச்சி தான்.
சிலருக்கு சைவ உணவுகளான காய்கறிகள் சாப்பிடுவது மிகப் பிடிக்கும். ஆனால், மற்ற சிலருக்கு அசைவ உணவுகளான இறைச்சி என்றால் அலாதிப் பிரியம். இறைச்சியில் அதிகளவில் புரதச்சத்து நிறைந்துள்ளது உண்மை தான். இருப்பினும், அளவோடு சாப்பிடுவது தான் நல்லது. பொதுவாக கோழி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியை விட, உலகில் அதிகம் பேரால் விரும்பி உண்ணப்படுவது மாட்டிறைச்சி தான்.
மாட்டிறைச்சி
undefined
மாட்டிறைச்சியில் வைட்டமின், புரதம், கொழுப்பு, இரும்பு, மினரல மற்றும் சிங், போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும், மாட்டிறைச்சியில் அதிக அளவில் கலோரிகள் நிறைந்துள்ளது. இதில், சில நன்மைகள் இருந்தாலும் பல தீமைகளும் அடங்கியுள்ளது. குறிப்பாக மாட்டிறைச்சியை ஆண்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. இப்போது, இதனால் உண்டாகும் பக்க விளைவுகள் என்னென்ன என்பதை அறிந்து கொள்வோம்.
மாட்டிறைச்சியின் பக்க விளைவுகள்
புற்றுநோய் அபாயம்
அரிசி, வெண்ணெய் மற்றும் சீஸ் போன்றவற்றில் கூட கொழுப்புகள் இருக்கிறது. இருப்பினும், அவற்றை எவ்வாறு உண்கின்றோமோ அது போலவே இந்த மாட்டிறைச்சியையும் அளவோடு சாப்பிடுவது நல்லது. ஏனெனில் மாடுகளில் உள்ள கொழுப்பானது உடல் தமனிகளில் உறைந்து, தங்கி இரத்த ஒட்டத்தை தடுக்கும். இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மாட்டிறைச்சியில் உள்ள கார்சினோஜென் (Carcinogen), புற்றுநோயை ஏற்படுத்தும். எனவே, அளவுக்கு அதிகமாக மாட்டுக்கறியை சாப்பிடுவதன் காரணத்தால், உடலில் கார்சினோஜென் அளவு அதிகரிக்கும்.
வாழ்நாள் குறையும்
மாட்டிறைச்சியை அதிகமாக எடுத்துக் கொண்டால், நம்முடைய வாழ்நாள் குறையும் என புதிய மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கை விடுக்கிறது. அதிகளவில் மாட்டுக்கறியை உண்பதனால், இதய நோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், இந்த இறைச்சியில் அதிகமான அளவில் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இதனால் தமனிகளில் செல்லும் இரத்தத்தின் அளவு குறைவது மட்டுமின்றி, வீரியம் குறைந்து நாள்பட்ட நோய்களையும் ஏற்படுத்தும். ஆகையால், மற்ற இறைச்சிகளைப் போல இதையும் அளவோடு எடுத்துக் கொள்வது தான் நல்லது.
க்ரிஸ்பி அண்ட் க்ரன்ச்சி ஃபிஷ் பால்ஸ் செய்யலாம் வாங்க!
உடல் எடை கூடும்
மாட்டிறைச்சியில் அதிவேக அளவில் கலோரிகள் இருக்கிறது. ஆகவே இவற்றை அடிக்கடி அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மாட்டிறைச்சியை விரும்பி உண்ணும் ஆண்கள், அதனை அளவோடு எடுத்துக் கொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை. எந்த உணவாக இருந்தாலும் அளவுக்கு மீறும் போது தான், நஞ்சாக மாறுகிறது என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.