சக்கரை நோய் உள்ளவர்கள் பனீர் சாப்பிடலாமா..?

By Dinesh TGFirst Published Jan 31, 2023, 6:16 PM IST
Highlights

நீரிழிவு நோயாளிகள் பல உணவுகளை சாப்பிடலாமா என்ற சந்தேகம் எப்போதும் எழுகிறது. அதில் ஒன்று தான் சர்க்கரை நோயாளிகள் பனீர் சாப்பிடலாமா என்பதும். 
 

சர்க்கரை நோய் என்பது வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடிய பாதிப்பு. முறையான சிகிச்சைகள், தவறாமல் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருவது, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துவது போன்றவற்றால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மேலும், கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாகவும், மாவுச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகமாகவும் உள்ள உணவுகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. 

எப்போதும் நீரிழிவு நோயாளிகள் பல உணவுகளை சாப்பிடலாமா? என்கிற கேள்வி எழுகிறது. அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்று தான் பனீர். பன்னீர் மிகவும் சத்தான பால் பொருட்களில் ஒன்றாகும். பன்னீர் புரதச்சத்து நிறைந்தது. கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான பல கூறுகள் அவற்றில் உள்ளன.

பனீரில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மூட்டுவலி போன்ற நோய்களைத் தடுக்கவும் பனீர் உதவுகிறது. பனீரில் உள்ள தாதுக்கள் ஈறு நோய் மற்றும் பல் நோய்களைத் தடுக்கின்றன. பனீர் ஒரு ஆரோக்கியமான உணவாகும், இது உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே உங்கள் குழந்தைகளின் உணவில் கண்டிப்பாக பனீரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

மாதிவிடாய் நேரத்தில் வலி தெரியாமல் இருக்க இதைச் சாப்பிட்டால் போதும்..!!

நீரிழிவு நோயாளிகள் மிதமான அளவில் பனீர் சாப்பிடலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். பனீரின் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகவும் குறைவு. அவற்றில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் மிதமாக உட்கொள்ளலாம். அவற்றில் சர்க்கரை குறைவாக இருக்கும் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். 
 

click me!