தொப்பையை குறைக்க சிரமமா இருக்கா.? அட்டகாசமான 5 உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா.?

Published : Jan 31, 2023, 05:31 PM IST
தொப்பையை குறைக்க சிரமமா இருக்கா.? அட்டகாசமான 5 உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா.?

சுருக்கம்

உடல் எடையை குறைக்க சிரமப்படுகிறீர்களா ? இந்திய காலை உணவுகளை வைத்தே உடம்பில் உள்ள குறிப்பாக வயிற்றில் உள்ள தொப்பையை குறைக்கலாம். அவை பற்றி காணலாம்.

உலகம் முழுவதுமே இன்று ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது இந்திய உணவுகளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.

இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு மற்றும் உவர்ப்பு என அனைத்து சுவைகளையும் உங்களது உணவில், நாளொன்றுக்கு ஒரு சுவை என்ற விகிதத்திலாவது சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று கூறுகிறது ஆயுர்வேதம். ஆரோக்கியமான உணவுக்கு மாற்றாக எதுவும் இல்லை.

ஓட்ஸ் இட்லி - காலை வேளையில் சாப்பிடும் இட்லிகளில் எத்தனையோ வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் உடல் எடையை குறைக்க உதவும் ஓட்ஸ் கொண்டு செய்யப்படும் இட்லி. உண்மையிலேயே இந்த ஓட்ஸ் இட்லி எடையை குறைப்பதுடன், உடலின் வலிமையை அதிகரிக்கும். ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்களுக்கு ஏற்றது.

மூங் தால் சீலா - மூங் தால் சீலா என்பதும் பாசிப்பருப்பு சீலா, புரதத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சீலா ஒரு மிருதுவான மூங் டால் மாவுடன் தயாரிக்கப்படுகிறது. இது பாலாடைக்கட்டி மற்றும் காய்கறிகளுடன் மேல் செய்யப்படுகிறது. இதனை நீங்கள் புதினா சட்னியுடன் சாப்பிடலாம்.

மிக்ஸ் பருப்பு தோசை - உங்கள் காலை உணவில் புரதத்தை சேர்க்க சூப்பரான உணவாகும். ஐந்து வெவ்வேறு பருப்புகளை சேர்த்து, சாப்பிடுவது உங்களுக்கு ஏற்ற சரியான உணவாக இருக்கும்.

தக்காளி உப்புமா - மிகவும் பிரபலமான தென்னிந்திய உணவுகளில் ஒன்று தான் உப்புமா.றாகும். இந்த சூஜி - தக்காளி உப்மா ஆரோக்கியமானது. இதில் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் உள்ளது. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது சிறந்தது.

முட்டை புர்ஜி - முட்டை விரும்பிகள் அதிகம் விரும்பி உண்ணும் இந்த முட்டை மசாலாக்கள் வட மாநிலங்களில் ரொம்பவே பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த முட்டை புர்ஜி வெங்காயம், தக்காளி எல்லாம் சேர்த்து வதக்கி மசாலாக்கள் எல்லாம் போட்டு சூப்பரான முட்டை கலவை ஒன்றை தயார் செய்து கொடுக்கிறது. காலை நேர உணவுக்கு ஏற்றதாகும்.

இதையும் படிங்க..டேய் எப்புட்றா.. நாம் தமிழர் கட்சியில் இணைய திருமகன் ஈவெரா என்னை சந்தித்தார் - சீமான் பரபரப்பு பேச்சு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தர்பூசணி vs முலாம்பழம்: கோடையில் உடல் எடை குறைய எது பெஸ்ட் தெரியுமா?
Ghee Benefit: குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் நெய் கொடுப்பதால் இவ்வளவு நலனா?