ஆல்  இன் ஒன் “சிக்கன் முந்திரி கிரேவி” ஈஸியா செய்யலாம் வாங்க!

By Dinesh TG  |  First Published Jan 31, 2023, 1:02 PM IST

வாருங்கள்! சுவையான சிக்கன் முந்திரி கிரேவி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


சிக்கன் என்றால் போதும் வேறு எதையும் தேட மாட்டார்கள் அசைவ பிரியர்கள். சிக்கன் வைத்து சிக்கன் 65, சில்லி சிக்கன், தந்தூரி சிக்கன், சிக்கன் மசாலா, சிக்கன் பிரியாணி, சிக்கன் குழம்பு என்று மேலும் பல விதமான ரெசிபிக்களை செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் சுவையான சிக்கன் முந்திரி கிரேவியை செய்ய உள்ளோம்.

இதனை சாதம், பிரியாணி,ரொட்டி வகைகள், தோசை என்று அனைத்திற்கும் வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். மேலும் இதில் அரைத்த மசாலா சேர்த்து செய்யப்படுவதால் இதன் சுவை வழக்கமாக செய்யும் ரெசிப்பிகளில் இருந்து ஒரு அலாதியான சுவையை தரும்.

வாருங்கள்! சுவையான சிக்கன் முந்திரி கிரேவி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
 

  • சிக்கன்-1/2 கிலோ
  • சின்ன வெங்காயம் -20
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • மல்லித்தூள் -2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
  • தயிர்- 1 ஸ்பூன்
  • பால்- 2 ஸ்பூன்
  • மல்லித்தழை-கையளவு
  • முந்திரி- தேவையான அளவு
  • உப்பு- தேவையான அளவு
  • எண்ணெய் -தேவையான அளவு

Latest Videos

undefined

அரைப்பதற்கு :

  • முந்திரி -10
  • சோம்பு-1/2 ஸ்பூன்
  • கசகசா-1/4 ஸ்பூன்
  • மிளகு -1/2 ஸ்பூன்
  • சீரகம் - 1/2 ஸ்பூன்
  • பட்டை- 1 இன்ச்
  • கிராம்பு -4

 லஞ்ச் பாக்ஸ் ரெசிபி-"கேப்ஸிகம் ரைஸ் " 


செய்முறை:

முதலில் சிக்கனை சுத்தம் செய்து விட்டு அலசி வைத்துக் கொள்ள வேண்டும். மல்லித்தழை மற்றும் வெங்காயத்தை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்சி ஜாரில் முந்திரி,சோம்பு, கசகசா ,மிளகு, சீரகம்,பட்டை மற்றும் கிராம்பு ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் போன்று அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த பேஸ்ட் எடுத்து அலசி வைத்துள்ள சிக்கனில் சேர்த்து, பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து 1/2 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின் அதில் அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

பின் அதில் அதில் மல்லித்தூள், மிளகாய் தூள் மஞ்சள் தூள்,கெட்டி தயிர் மற்றும் பால் ஆகியவற்றை சேர்த்து மசாலாக்களின் கார தன்மை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். அடுத்தாக அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சுமார் 20 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். இறுதியாக முந்திரி மற்றும் பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவி இறக்கினால் சிக்கன் முந்திரி கிரேவி ரெடி!

click me!