வாருங்கள்! டேஸ்ட்டான காஜூ மசாலா ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக சப்பாத்தி,புல்கா போன்றவற்றிற்கு நாம் பெரும்பாலும் குருமா, கிரேவி போன்றவை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் சற்று வித்தியாசமாக சுவையான ஒரு ரெசிபியை செய்ய உள்ளோம். முந்திரி வைத்து தாபா ஸ்டைலில் காஜூ மசாலா எனும் ரெசிபியை செய்ய உள்ளோம். இதனை சப்பாத்தி, நாண்,புல்கா, ஃப்ரைட் ரைஸ்,தோசை என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம். இதன் சுவை வழக்கமாக நாம் சாப்பிடும் குருமாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
வாருங்கள்! டேஸ்ட்டான காஜூ மசாலா ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
சுவைக்க தூண்டும் "மலபார் முட்டை மசாலா" செய்யலாம் வாங்க!
undefined
செய்முறை :
அடுப்பில் வைத்து அதில் சிறிது நெய் சேர்க்க வேண்டும். நெய் உருகிய பின் அதில் முந்திரி பருப்புகளை சேர்த்து அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து முந்திரி பருப்புகளை பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் தக்காளியை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் சிறிது பட்டர் சேர்த்து அதில் பட்டை ,லவங்கம் சேர்த்து வறுத்துக் வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள இஞ்சி,பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின் தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கி விட வேண்டும். பின் கலவையை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு ஆற வைத்து மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் வெண்ணெய் சேர்த்து பட்டை மற்றும் கிராம்பு தாளித்து பின் அதில் அரைத்த பேஸ்ட் சேர்க்க வேண்டும்.
பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,தனியா தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். அடுத்தாக அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து நன்கு கிளறி விட்டு அதில் 1 க்ளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். மசாலா நன்கு கொதித்து வாசனை வந்த உடன் கஸ்தூரி மேத்தியை தூவி இறக்கினால் சுவையான காஜூ மசாலா ரெடி!