வாருங்கள்! ருசியான கொண்டக்கடலை பிரியாணி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும் மதியத்திற்கு டிஃபரெண்ட்டாக என்ன சமைக்கலாம் என்று யோசித்து கொண்டு இருக்கீறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.இன்று நாம் சத்தான மற்றும் சுவையான கொண்டக்கடலை வைத்து பிரியாணி செய்யலாம் வாங்க. வழக்கமாக நாம் வெஜ் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி, சிக்கன் பிரியாணி , மட்டன் பிரியாணி என்று பல விதமான பிரியாணிகளை சமைத்து சாப்பிட்டு இருப்போம்.
அந்த வரிசையில் இன்று நாம் கொண்டக்கடலை வைத்து அருமையான பிரியாணி செய்ய உள்ளோம்.பொதுவாக கொண்டக்கடலை வைத்து சுண்டல், மசாலா, கிரேவி, குழம்பு என்று தான் சமைத்து இருப்போம். ஆனால் இன்று நாம் டேஸ்ட்டான கொண்டக்கடலை பிரியாணி பார்க்க இருக்கிறோம்.
வாருங்கள்! ருசியான கொண்டக்கடலை பிரியாணி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
undefined
மூட்டு வலிக்கு நிவாரணம் தரும் – “முடக்கத்தான் கீரை சட்னி” செய்யலாமா?
செய்முறை:
முதலில் கொண்டைக்கடலையை தண்ணீரில் ஊற வைத்து ,பின் குக்கரில் போட்டு 6 விசில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பச்சரிசியை 10 நிமிடங்கள் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும் .அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் பிரிஞ்சி, ஏலக்காய், பட்டை மற்றும் லவங்கம் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்தாக மெல்லிய அளவில் வெட்டிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட வேண்டும்.
வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய பின் பச்சைமிளகாய் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட வேண்டும்.பின்பு பொடியாக அரிந்து வைத்துள்ள தக்காளி, சேர்த்து, தக்காளி மசியும் வரை வதக்கி விட வேண்டும். பின் மல்லித்தழை மற்றும் புதினா சேர்தது மல்லித்தூள்,மிளகாய் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பின் அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
தண்ணீர் கொதிக்கும் போது வேக வைத்து எடுத்துள்ள கொண்டக்கடலை சேர்த்து கலந்து விட வேண்டும். இப்போது ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து கலந்து லெமன் ஜூஸ் சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு பின் குக்கரை மூடி விட்டு 1 விசில் வைத்து எடுத்தால் சுவையான கொண்டக்கடலை பிரியாணி ரெடி!