வெறும் 10 நிமிடத்தில் முகப்பொலிவு பெற உதவும் "கொத்தமல்லி ஃபேஸ் மாஸ்க்"

By Dinesh TGFirst Published Jan 31, 2023, 5:17 PM IST
Highlights

கொத்தமல்லி ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தி முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை அகற்றி முகப்பொலிவை பெறுவது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய இளம் தலைமுறையினரில் பெண்களும் சரி,ஆண்களும் சரி அனைவருமே தங்களை அழகாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அலுவலக பணியினால் பல்வேறு நபர்களை சந்திக்கும் போது முகம் புத்துணர்ச்சியாகவும், அழகாகவும் அவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவும், மேலும் அழகாக இருக்கும் போது ஒரு புது தன்னம்பிக்கையும் ஏற்படுவதால் நேர்த்தியான அழகில் இருக்க விரும்புகிறார்கள். வயது வயது ஏற ஏற முகத்தில் கரும்புள்ளிகள் , கருவளையம் மற்றும் பருக்கள் போன்றவை ஏற்பட்டு முக அழகை கெடுக்கும். இம்மாதிரியான பிரச்சனைகளை சரி செய்ய மார்க்கெட்களில் விற்பனை செய்படுகின்ற சில ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதால் முகத்தில் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுகிறது .

மேலும் முகத்தில் இருக்கும் பிரச்சனைகள் குறையாமல் நம் உழைப்பும், பணமும், நேரம் மட்டுமே குறைகிறது. முகத்தில் ஏற்படுகின்ற சரும பிரச்சனைகளை சரி செய்வதற்கு நம்மில் பலரும் ஃபேஸ் மாஸ்க் போன்றவற்றை தான் அதிகமாக வாங்கி பயன்படுத்துகிறோம். மார்க்கெட்டில் இருந்து வாங்கும் கெமிக்கல்ஸ் கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டிலேயே இயற்கையாக மேலும் எளிதில் கிடைக்கக்கூடிய கொத்தமல்லி இலைகளை வைத்து ஒரு ஃபேஸ் மாஸ்க் செய்து அதை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நம்ம சருமத்திற்கு எந்த வித பக்க விளைவும் இல்லாமல் இயற்கையான முறையில் முகப்பொலிவும் ,கரும்புள்ளிகள் மறைந்து முகம் பிரகாசமாக மாற தொடங்கும்.

கொத்தமல்லி ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தி முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை அகற்றி முகப்பொலிவை பெறுவது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 

தேவையான பொருட்கள் :

  • கொத்தமல்லி இலை-1 கப்
  • எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
  • கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்
  • ரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன்


செய்முறை :

முதலில் கொத்தமல்லி இலைகளை சுத்தம் செய்து ஓடும் நீரில் அலசி வைத்துக் கொண்டு பின் அதனை மிக்ஸி ஜாரில் ( தண்ணீர் எதுவும் சேர்க்காமல் ) நன்றாக பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை ஒரு சல்லடை போட்டு வடிகட்டி அல்லது பிழிந்து அதில் இருக்கும் சாறை மட்டும் தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் கற்றாழை ஜெல் மற்றும் லெமன் ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் இதில் சிறிது ரோஸ் வாட்டரையும் சேர்த்து ஒரு பேஸ்ட் போன்று செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் இந்த ஃபேஸ் மாஸ்க்கினை முகத்தில் அப்பளை செய்து சுமார் 15 நிமிடங்கள் வரை வைத்து பின் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் நிறமாகவும், முகப்பொலிவாகவும் இருப்பதை நம்மால் உணர முடியும். நீங்களும் இதனை வாரம் ஒரு முறை செய்து நல்ல மாற்றத்தை உணருங்கள்!

click me!