கறிவேப்பிலையில் இருக்கும் மகத்துவம்- தெரிஞ்சா இனி ஒதுக்கிவைக்கமாட்டீங்க..!

By Dinesh TG  |  First Published Oct 15, 2022, 10:40 AM IST

கறிவேப்பிலை பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் மட்டுமே சேர்க்கப்படுகின்றது. ஆனால் இதில் மனித உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் இடம்பெற்றுள்ளன
 


இந்திய உணவுகளில் கறிவேப்பில்லைக்கு தனி இடம் உண்டும். அதுவும் தென்னிந்திய சமையல் முறைகளில் கறிவேப்பிலை இல்லாமல் எந்த வேலையும் நடக்காது. சமைக்கும் உணவுகள் நறுமணத்துடனும் சுவையாகவும் இருக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகளவில் உள்ளது. புற அழகுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் கறிவேப்பிலை பலன் தருகிறது. ஒருசிலர் சமையலுக்கு மட்டுமில்லாமல், பச்சையாகவே சாப்பிட்டு வருவதை நம்மில் பலர் பார்த்திருப்போம். அதுவும் காலையில் கறிவேப்பிலை இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து மேலும் பல்வேறு தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ரத்த சோகை நீங்கும்

Latest Videos

ரத்த சோகை உள்ளவர்கள் காலையில் ஒரு பேரிச்சம்பழத்துடன் சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து இரத்த சோகை நீங்கும். அதேபோன்று சக்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால் நீரிழிவு பாதிப்பு கட்டுக்குள் வரும்.

உடலில் வைட்டமின் குறைப்பாட்டை எச்சரிக்கும் அசாதாரண அறிகுறிகள்..!!

முடி வலுபெறும்

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை சாப்பிட்டு வருவதன் மூலம் , வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்துவிடும். இதனால் இடுப்பின் அழகு எடுப்பாக மாறும். அதேபோன்று கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவதன் வாயிலாக  முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையும் உறுதியும் கிடைக்கும்.

கெட்ட கொழுப்பு கரையும்

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை உள்ளவர்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

தந்தையாவதற்கு சரியான வயது என்ன தெரியுமா?

பலருக்கும் சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும். கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.

click me!