பீதியை கொடுக்கும் கொழுப்புக் கட்டிகளை கரைப்பது எப்படி..? இதை செய்யுங்க போதும்; கவலையே வேண்டாம்..!!

By Dinesh TGFirst Published Oct 14, 2022, 11:53 PM IST
Highlights

இயற்கையான மருத்துவ முறைகள் கொண்டு கொழுப்புக் கட்டிகளை எளிதாகக் குறைக்கலாம். அதற்கு உண்ணும் உணவுகளில் செய்யப்படும் மாற்றங்கள் உடனடித் தீர்வாக இருக்கும். அதேபோல சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதும் கொழுப்புக் கட்டிகளை கரைவதற்கு வழிவகுக்கும். 
 

கொழுப்பு திசுக்கள் உடலின் உட்பகுதியில் வளர்ச்சி பெரும் நிலை லிபோமா என்று குறிப்பிடப்படுகிறது. இதை தமிழில் கொழுப்புக் கட்டிகள் என்று கூறப்படுகிறது. உடலில் திடீரென்று உருவாகக்கூடிய இந்த கொழுப்புக் கட்டிகளை கண்டு பலருக்கும் புற்றுநோய் அச்சம் ஏற்படுவதுண்டு. ஆனால் இது லிபோமா புற்றுநோய் கட்டிகள் கிடையாது. நாளிடைவில் புற்றுநோயாகவும் மாறாது. மரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட்ரால் போன்ற காரணங்களாலும், அதிகளவில் வேலை செய்யாமல் சும்மா இருப்பதாலும் இந்த கட்டிகள் ஏற்படுகின்றன. இந்த கட்டிகளை அறுவை சிகிச்சை செய்துதான் அகற்ற முடியும். எனினும், இது மீண்டும் வராது என்று உறுதியாக கூற முடியாது. கொழுப்பு கட்டிகள் வளர்ச்சி பெறுவதற்கான காரணங்கள் இன்று வரை மருத்துவ உலகம் கண்டறியவில்லை. இருப்பினும் இயற்கையான வழிமுறைகள் வாயிலாக கொழுப்புக் கட்டி கரைக்கலாம். மேலும் அதை வராமலும் தடுக்கலாம். அதுகுறித்த தகவல்களை அடுத்தடுத்து பார்க்கலாம்.

அதிக நேரம் உட்கார்ந்தால் உங்கள் கால்கள் வீங்குகிறதா? இந்த பாதிப்பாக இருக்கலாம்..!!

ஆரஞ்சு பழங்கள் 

ஏராளமான வைட்டமின்கள் நிறைந்து காணப்படும் பழங்களில் ஒன்று ஆரஞ்சு. இதிலிருக்கும் சிட்ரஸ் அமிலத்தன்மை உடலில் தேவையற்று சேரும் கொழுப்புகளை கரைத்துவிடுகிறது. இதை தினமும் நமது உடலில் சேர்த்துக் கொள்வதன் மூலம், லிபோமா இருக்கும் பட்சத்தில், அதை கரைந்து வரும். குறிப்பாக விதையுள்ள ஆரஞ்சு பழங்களை உண்டு வருவது கட்டிகளை கரைக்கும் விஷயத்தில் உடனடி பலன் தரும்.

ஒத்தடம் கொடுப்பது

முதுகு வலி, கால் வலிகளுக்கு ஒத்தடம் கொடுப்பது போல கொழுபுக் கட்டிகளுக்கும் ஒத்தடம் கொடுத்து வந்தால், கை மேல் பலன் கிடைக்கும். அதற்கு ஒரு பருத்தித் துணியில் சிறிது கல்லுப்பை போட்டு முடிஞ்சு கட்டிக்கொள்ள வேண்டும். அதை நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் தோய்த்து, ஒரு தோசைக்கல்லில் சூடேற்றிட வேண்டும். அந்த முடிச்சை கொழுப்பு கட்டிகளின் மீது நல்ல சூட்டோடு சூட்டாக  ஒத்தடம் கொடுத்து வர வேண்டும். இதுவும் கொழுப்புக் கட்டியை கரைத்துவிடும்.

உங்களுக்கு மழைக்காலங்களில் பல் கூச்சம் உண்டாகுகிறதா..?? இந்த பிரச்னையாக இருக்கலாம்..!!

கொடிவேலி மூலிகை

நம்முடைய நாட்டில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்து காணப்படுகின்றன. அதனுடைய பண்புகள் பலருக்கும் தெரியாததால், எந்த பிரச்னை என்றாலும் உடனடியாக மருத்துவரை நாடும் பழக்கம் நம்மிடைய நிறைந்துள்ளது. அதில் ஒன்று தான் கொடிவேலி. இந்த மூலிகையால் செய்யப்படும் தைலத்துக்கு நோய் தீர்க்கும் சக்திகள் உண்டு. கொடிவேலி தைலம் சித்த மருத்துவக் கடைகளில் தாராளமாக கிடைக்கின்றன. அதை கொழுப்பு கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வர அக்கட்டிகள் மறையும்.

விரதம் இருக்கலாம்

கொழுப்பு கட்டி கரைய வாரம் ஒரு வேளை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து வரலாம். ஒரு பொழுது இருப்பது, உடலில் கொழுப்பு சேருவதை கட்டுப்படுத்தும். உடலில் உள்ள ரத்தம் மற்றும் திசுக்களில் கொழுப்பு சேராமல் தவிர்க்கப்படும். இதனாலும் கொழுப்புக் கட்டிகள் வளரும் தடுக்கப்பட்டது, உடனடியாக கரையத் துவங்கும்.

click me!