கொங்கு நாடு சுவையான மட்டன் குழம்பு செய்வது எப்படி ?

By Dinesh TG  |  First Published Oct 14, 2022, 5:40 PM IST

மண் வாசனையுடன் கூடிய கொங்கு நாடு மட்டன் குழம்பு செய்வது எப்படி என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
 


வழக்கமாக நாம் மட்டனை வாங்கி ஒரே மாதிரியான மட்டன் குழம்பு அல்லது மட்டன் கிரேவியை தான் பெரும்பாலும் செய்து சாப்பிடுவோம்.ஒரே மாதிரியான மட்டன் குழம்பு செய்வதால் வீட்டில் இருப்பவர்களுக்கு போர் அடிக்கும் அல்லவா? தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாதிரியான சமையல் முறை இருக்கிறது. செட்டிநாடு, கொங்கு நாடு, மதுரை ஸ்பெஷல் என பல வகையான சமையல் முறைகள் பாலோ செய்கிறார்கள்.ஒவ்வொன்றிற்கும் ஒரு தனித்துவமான சுவையும், மணமும் இருக்கும். 

அந்த வகையில் இன்று நாம் மிக பிரபலமான கொங்கு நாடு மட்டன் குழம்பு காண போகிறோம். இதன் சுவை, உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். மேலும், இந்தக் குழம்பையே அடிக்கடி செய்து தரும்படி கேட்பார்கள். மண் வாசனையுடன் கூடிய கொங்கு நாடு மட்டன் குழம்பு செய்வது எப்படி என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Latest Videos

undefined

தேவையான பொருட்கள்:

மசாலா அரைக்க :

சின்ன வெங்காயம் -200 கிராம் 
பூண்டு- 10 பல் 
சீரகம் 2 ஸ்பூன் 
மிளகு 1 ஸ்பூன் 
காய்ந்த மிளகாய் 10
தனியா -1 ஸ்பூன் 
துருவிய தேங்காய் -1 கப் 

Mirchi bajji : ஆந்திராவின் ஸ்பெஷல் - ஸ்ட்ரீட் புட் மிரப்பகாய் பஜ்ஜி செய்வோமா?

குழப்பு செய்ய :

மட்டன்-1/2 கிலோ 
சின்ன வெங்காயம் -200 கிராம் 
பச்சை மிளகாய் -2
சோம்பு- 1/2 ஸ்பூன் 
பூண்டு- 10 பல் 
மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன் 
கருவேப்பிலை 1 கொத்து 
எண்ணெய் தேவையான அளவு 
தண்ணீர் தேவையான அளவு 
உப்பு தேவையான அளவு 
மல்லி தழை சிறிது 

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் ,அதில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் தனியா சேர்த்து மணம் வரும் வரை வறுத்துக் கொண்டு அதனை ஆற விட்டு ஒரு மிக்சி ஜாரில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

பின் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறியவுடன் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் இதனையும் மிக்ஸி ஜாரில் மாற்றிவிட்டு , ஜாரில் சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு குக்கரை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானவுடன், அதில் சோம்பு, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தையும் சேர்த்துக் கொண்டு நன்றாக வதக்கி விட வேண்டும். 

Prwan Vada : மசால் வடை, பருப்பு வடை தெரியும். இறால் வடை தெரியுமா?

வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின் மட்டனை சேர்த்து கொஞ்சம் கிளறி விட்டு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக வேகவைத்து விட்டு அதனுடன் அரைத்த வைத்துள்ள மசாலா சேர்த்து ஒரு முறை பிரட்டி எடுத்து கொண்டு உப்பு சேர்த்துக் நன்றாக கிளறி விட வேண்டும்.

பின்பு குக்கரை மூடி விட்டு சுமார் 7 முதல் 8 விசில் வரும் வரை, அடுப்பை மிதமான தீயில் வைத்து , வேக வைத்துக்கொள்ள வேண்டும். 8 விசில் வரை வெந்த பின் அடுப்பை அணைத்து விட்டு ஆவி அடங்கியவுடன் குக்கரை திறந்து குழம்பில் சிறிது சிறிது மல்லி தழையை சேர்த்து கிளறிவிட்டால் அருமையான கொங்கு நாடு மட்டன் குழம்பு ரெடி!

click me!