தினமும் பீன்ஸ் சாப்பிட்டால் நுரையீரல் பாதிப்பு வராதாம் – ஜப்பானிய ஆய்வு சொல்லுது…

 
Published : Jun 10, 2017, 01:30 PM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
தினமும் பீன்ஸ் சாப்பிட்டால் நுரையீரல் பாதிப்பு வராதாம் – ஜப்பானிய ஆய்வு சொல்லுது…

சுருக்கம்

Lung damage if you eat everyday beans - Japanese study says ...

மனிதன் ஆரோக்கியமாக வாழ உடலின் பல்வேறு உறுப்புகள் கட்டாயம் செயல்பட வேண்டியது அவசியமாகும். மனிதன் உயிருடன் வாழ இதயம் தொடர்ந்து சுவாசிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு காற்றை சுவாசிப்பதில் நுரையீரல் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது மனிதன் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

நுரையீரல் பாதிப்பால் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் உயிரிழக்கின்றனர்.

பொதுவாக புகைபிடித்தல், புகையிலை பொருட்களை பயன்படுத்துதல், போன்றவற்றால் நுரையீரல் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டு வந்தது.  

ஆனால் சமீப காலமாக பெருகிய வாகனங்களால் காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் சுமார் 60 சதவிகிதம் பேர் அசுத்தமான சுவாசிப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகின்றன. இதனால் நுரையீரல் புற்றுநோய், நெஞ்சுசளி, மூச்சுத்திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகள் போன்ற நோய்கள் மனிதனை தாக்குகிறது.

இந்நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவத்துறையில்  மருந்துகள் இருந்தாலும் வருமுன்காப்போம் என்பது கேள்வி குறியாகவே உள்ளது.  

இந்நிலையில் நுரையீரல் பாதிக்காமல் இருக்க மனிதன் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய காய்கறிகள் குறித்த ஆய்வை கார்ட்டின் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஜப்பானில் உள்ள மருத்துவமனை ஆய்வுகூடத்தில் மேற்கொண்டனர்.

இதன் முடிவில் பீன்ஸ், கலந்த உணவை தினமும் 75 முதல் 100 கிராம் வரை சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் கணிசமாக குறைந்தது தெரிந்தது.

இதுமட்டுமல்லாமல் நோய் பாதிப்பு இருப்பவர்கள் பீன்சை சாப்பிடும்போது அவர்களின் வியாதி வளர்ச்சி விகிதம் குறைந்தது. நல்ல நிவாரணம் கிடைப்பதையும் ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.

குறிப்பாக பச்சை பீன்சில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் மாங்கனீசு ஆகிய சத்துகள் அதிகம் உள்ளது. இது தவிர புரோட்டீன் சத்தும் பச்சை பீன்சில் அதிகம் உள்ளது.

தினமும் சுமார் 50 கிராம் பீன்சை உட்கொண்டால் நுரையீரல் தொடர்பான நோய் தாக்குதலில் இருந்து 90 சதவீதம் வரை மனிதனுக்கு நோய் ஏற்படாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பீன்சை வேகவைக்கும் போது அந்த தண்ணீரை கீழே ஊற்றாமல் சாம்பார் அல்லது சூப் தயாரிக்கப் பயன்படுத்துவதன் மூலம் பீன்சின் முழுசத்துகளையும் பெறமுடியும்.

பீன்சை முழுவதுமாக வேகவைப்பதை காட்டிலும் அரை வேக்காட்டுடன் சாப்பிடுவது சிறந்தது.

PREV
click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
Skin Damaging Foods : முகப்பருக்களே இல்லாத சருமத்திற்கு இதுதான் ஒரே வழி! இந்த 7 உணவுகளை உடனே நிறுத்துங்க