உங்களுக்குத் தெரியுமா? கேன்சர் வராமல் பாதுகாக்கக்கூடிய சக்தி காளானுக்கு உண்டு…

 
Published : Jun 10, 2017, 01:26 PM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
உங்களுக்குத் தெரியுமா? கேன்சர் வராமல் பாதுகாக்கக்கூடிய சக்தி காளானுக்கு உண்டு…

சுருக்கம்

Do you know Cancer has the power to protect the cancer ...

‘‘காளான் என்கிற போதே பலரும் அசைவ உணவா? என சந்தேகம் கொள்கின்றனர். இது 100% சைவ உணவு.

மழைக்காலத்தில் அங்கங்கு முளைப்பது நாய்க்குடை எனப்படும் பூஞ்சைக் காளான். நாம் இதை உட்கொள்ளக் கூடாது. உலகில் நூற்றுக்கணக்கான காளான் வகைகள் உள்ளன. எல்லாவற்றையும் உட்கொள்ள இயலாது.

சமையலுக்கு என்று தனியாக வளர்த்து கடைகளில் விற்பதை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மொட்டுக் காளான் (Button Mushrooms) மற்றும் சிப்பிக் காளான் (Shell Mushrooms) என இரண்டு வகை மட்டுமே கிடைக்கின்றன. இதனுடைய வடிவத்திற்கேற்பவே பெயரும் அமைந்தது.

காளான்களுக்கு அதிக முக்கியத்துவம் வந்ததற்கு காரணம் இதில் உள்ள மிகக்குறைவான கலோரிகள்.

சிறந்த புரதச் சத்தைக் கொண்டது.

குறைவான கொழுப்பு உடையது. அதுவும் உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு கொண்டதால், எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உண்ண நினைக்கும் உணவு.

காளான் எளிதில் ஜீரணமாகக் கூடியது.

சமைப்பதற்கு மிகக்குறைவான நேரம்தான் ஆகும்.

இதில் அதிகமான பொட்டாசியமும் குறைவான சோடியமும் உள்ளதால் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்ல உணவாகக் கருதப்படுகிறது.

புரதம் அதிகமாகவும் நார்ச்சத்தும் உள்ளதால் நீரிழிவு உள்ளவர்களும் இதைப் பயன்படுத்தலாம்.

இதில் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களில் பாந்தியானிக் ஆசிட், பி2, பி3, பி6 மற்றும் ஃபோலிக் ஆசிட் ஆகியன உள்ளன. பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் ஒரே உணவில் இத்தனை இருப்பது அரிது.

மினரல்களில் ‘காப்பர்’ அதிக அளவு உள்ளது.

இதைத் தவிர கேன்சர் வராமல் பாதுகாக்கக்கூடிய சக்தி இதில் உண்டு என்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
Skin Damaging Foods : முகப்பருக்களே இல்லாத சருமத்திற்கு இதுதான் ஒரே வழி! இந்த 7 உணவுகளை உடனே நிறுத்துங்க