இந்த 8 உணவுகள் உடலில் நீர்ச்சத்து குறையச் செய்யும்!!

Published : Jun 09, 2025, 05:14 PM IST
spicy food

சுருக்கம்

கோடை காலத்தில் நீங்கள் சாப்பிடும் சில உணவுகள் உங்களது உடலில் நீர்ச்சத்தை குறைத்துவிடும். அவை என்னென்ன உணவுகள் என்று இந்த பதிவில் காணலாம்.

List of Foods That Reduce Water Content From Your Body During Summer : கோடையில் உடல் உஷ்ணமாகாமல் இருக்க பல வகையான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். மோர், இளநீர், சாலட், ஜூஸ் போன்ற உடலுக்கு குளிர்ச்சி மற்றும் நீரேற்றம் தரக்கூடிய உணவுகளில் அதிக கவனம் செலுத்துகிறோம். ஆனால், நாம் சாப்பிடும் சில வகையான உணவுகள் நம் உடலில் இருந்து நீர்ச்சத்தைக் குறைத்து விடுகிறது. அது எந்த மாதிரியான உணவுகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உடலில் நீர்ச்சத்தைக் குறைக்கும் 8 உணவுகள் :

ஊறுகாய்:

ஊறுகாயில் அதிக அளவு சோடியம் உள்ளதால், இது நீரை உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மையுடையது. இது தவிர, உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பை வெளியேற்ற அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும். ஆகவே கோடைகாலத்தில் நீங்கள் தினமும் ஊறுகாய் சாப்பிட்டால் உடலுக்குள் இருக்கும் நீர்ச்சத்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விரைவில் சோர்வடைந்து விடுவீர்கள்.

காரமான உணவு வகைகள் :

மிளகாய் தூள் மிளகு போன்ற அதிக காரமான மசாலா பொருட்கள் உடல் உஷ்ணத்தை உயர்த்தும். உடல் உஷ்ணத்தை குறைக்க அதிகப்படியான வியர்வை வெளியேறும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறைய வாய்ப்பு அதிகம் உள்ளன.

எண்ணெயில் பொரித்த உணவுகள் :

எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளில் உப்பு மற்றும் எண்ணெய் அதிகமாகவே இருக்கும். இவை வயிற்றில் சென்றவுடன் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இதன் விளைவாக உடலுக்குள் இருக்கும் நீரின் அளவானது சமநிலையை இழந்து உடல் சோர்வை ஏற்படுத்தும்.

சாட் உணவுகள் :

சாட் உணவுகள் பார்ப்பதற்கு கவர்ச்சியாக, சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும். உப்பு, ஸ்பைசஸ், புளி சட்னி போன்ற பல பொருட்கள் இதில் சேர்க்கப்படுகின்றன. கோடை காலத்தில் இந்த மாதிரியான உணவுகளை சாப்பிட்டால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளும் சமநிலையை இழந்துவிடும்.

மாசாலா அப்பளம் ;

மசாலா அப்பளத்திலும் உப்பு மற்றும் மசாலாக்கள் அதிகமாக இருப்பதால் கோடையில் இவற்றை சாப்பிட்டால் உடலில் இருந்து அதிக அளவு வியர்வை வெளியேறி, உடலில் நீர்ச்சத்து இழப்பை ஏற்படுத்தும்.

பாக்கெட் உணவுகள் :

லேஸ், குர்குரே, சிப்ஸ் போன்ற பாக்கெட் களில் விற்கப்படும் ஸ்னாக்ஸ்களில் உப்பு, ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக ரசாயனம் பொருட்கள் போன்றவை அதிகமாக சேர்க்கப்படும். இந்த மாதிரியான உணவுகள் சாப்பிடுவதற்கு ருசியாக இருந்தாலும், அதில் இருக்கும் அதிக அளவு உப்பு உடலை டீஹைட்ரேட்டாக செய்யும்.

காஃபின் பானங்கள் ;

காஃபினில் இருக்கும் டையூரிக் அமிலம் அடிக்கடி சிறுநீர் கழிக்க செய்ய தூண்டும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். எனவே கோடையில் டி அல்லது காபி குறைப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.

அதிகம் மசாலா கொண்ட அசைவ உணவுகள் :

உப்பு, எண்ணெய் மற்றும் மசாலாக்கள் அதிகம் கொண்டு தயாரிக்கப்படும் அசைவ உணவுகள் கோடையில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் இந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு தாகம் அதிகம் எடுக்கும். மேலும் உள் உறுப்புகளில் சூட்டை அதிகமாக உற்பத்தியாக்கும். இவை உடலை நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

ஆகவே, கோடையில் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க மேலே சொன்ன உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!