மூட்டு வலியால் அவதிப்படுறீங்களா? சிறந்த வீட்டு வைத்தியம் இதோ..இனி மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம்...!

By Kalai Selvi  |  First Published Jun 25, 2023, 5:00 PM IST

இத்தொகுப்பில் நாம் மூட்டு வலி கை வலி கால் வலி முழங்கால் வலி போன்ற வலி உள்ளவர்களுக்கு வீட்டில் இருந்தவாறு சரி செய்யக்கூடிய சில மருத்துவக் குறிப்புகளை குறித்துப் பார்க்கலாம்.


இந்த காலத்தில் எதற்கு எடுத்தாலும் மருத்துவமனைக்கு செல்லும் பழக்கம் பெரும்பாலானரிடம் இருக்கிறது. மருத்துவமனைக்கு சென்றால் தான் சுகம் ஆகும் என்ற மனப்பான்மை அவர்களிடம் உள்ளது. அந்த வகையில் இப்பதிவில் நாம் மூட்டு வலி, உடம்பு வலி போன்ற வலிகளுக்கு வீட்டில் இருந்தவாறு சரி செய்யக்கூடிய சில மருத்துவக் குறிப்புகளை குறித்துப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • இஞ்சி - தேவையான அளவு
  • பூண்டு - தேவையான அளவு
  • கிராம்பு - 5
  • வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
  • கற்பூரவள்ளி - 2 இலை
  • கடுகு எண்ணெய் - 50 மில்லி லிட்டர்

Latest Videos

செய்முறை:

  • முதலில் அடுப்பில் பாத்திரம் வைக்கவும். பாத்திரம் பாத்திரம் சூடானதும் அதில் கடுகு எண்ணெயை ஊற்ற வேண்டும்.
  • என்னை நன்கு சூடானதும் அதில் சிறிது சிறிதாக நறுக்கிய பூண்டுடையும், இஞ்சியையும் சேர்க்க வேண்டும்.
  • சிறிது நேரம் கழித்து கிராம்பு மற்றும் வெந்தயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு இதில் சிறிது சிறிதாக நறுக்கிய கற்பூரவள்ளி இலையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த இலையில் முழங்கால் வலியை சரி செய்யக்கூடிய சக்தி உள்ளது.
  • இவற்றை நன்கு வதக்க வேண்டும். இவற்றின் நிறம் மாறிய பின் அந்த எண்ணையை வடிகட்ட வேண்டும்.
  • உங்களுக்கு வலி அதிகமாக இருந்தால் இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • வலி இருக்கும் இடத்தில் இந்த எண்ணையை தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக இதனை நீங்கள் தூங்குவதற்கு முன் பயன்படுத்துவது நல்லது.
  • இந்த எண்ணையை வலி இருக்கும் இடத்தில் தேய்த்து விட்ட பின் காட்டன் துணியும் அல்லது பிளாஸ்டிக் பையை வைத்து கட்டி விட வேண்டும்.
  • இவ்வாறு தொடர்ந்து பத்து நாள் செய்து வந்தால் உங்கள் வலி இருக்கும் இடம் தெரியாமல் போகும்.
  • குறிப்பாக உங்கள் உடலில் காயம் இருக்கும் இடத்தில் இந்த எண்ணெயை போடக்கூடாது வழி உள்ள இடத்தில் மட்டும் தான் போட வேண்டும்.
click me!