Kidney Stone : வெறும் 7 நாளில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் இரணக்கள்ளி மூலிகை பற்றி தெரியுமா!

By Asianet Tamil  |  First Published Apr 24, 2023, 9:05 AM IST

கிட்னி ஸ்டோன் எப்படி உருவாகிறது?அதன் அறிகுறிகளை என்னென்ன? வந்தால் இந்த இராணக்கள்ளியை எப்படி எடுத்துக் கொள்வது ?  போன்ற தகவல்களை இந்த பதிவில் காணலாம்.


இன்று நம்மில் பலரும் கிட்னி ஸ்டோன் எனப்படும் கல்லடைப்பு பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதை பார்த்து வருகிறோம்.
இதற்காக பல்வேறு விதமான மருந்துகளை எடுத்துக் கொண்டு எந்த ஒரு பலனும் கிடைக்காமல் அதே நேரத்தில் வலியையும் பொறுக்க முடியாமல் அல்லல் படுவதை பார்த்து இருப்போம்.

இனி இந்த பிரச்சனை வருங்காலத்தில் வீட்டில் இருக்கும் மற்றவர்களும் அனுபவிக்க கூடாது அல்லது வரக்கூடாது என்று நினைத்தால் அது எவ்வாறு உண்டாகிறது? அதற்கான காரணம் என்ன ? கிட்னி ஸ்டோன் எப்படி உருவாகிறது?அதன் அறிகுறிகளை என்னென்ன? வந்தால் இந்த இராணக்கள்ளியை எப்படி எடுத்துக் கொள்வது ?  போன்ற தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

கிட்னி ஸ்டோன் ஏற்படக் காரணங்கள்:

நமது உடலில் இருக்கும் 2 சிறுநீரகங்களின் வேலை நம் உடம்பில் இருக்கும் கழிவுகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றும் பணியை செய்கிறது. நம் உடம்பில் தினமும் மெட்டபாலிசம் நடக்கும். நமது ரத்தத்தில் இருக்கும் உப்பு மற்றும் மற்ற வேதிப் பொருட்களை பிரித்து சிறுநீராக சிறுநீர் குழாய் வழியாக வெளியேற்றுகிறது.

இப்படி ரத்தத்தில் இருந்து பிரிக்கக் கூடிய உப்புகள் சின்ன சின்ன துகள்களாக சிறுநீரகத்தில் சில நேரங்களில் படிந்து விடுகிறது. இதுவே ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு கற்களாக உருமாறுகிறது. சில நேரங்களில் அவை சிறுநீராக வெளியேறும். ஆனால் சில நேரங்களில் அவை கற்களாக வளர்ந்து கொண்டு இருக்கும். வளர்ந்த கற்கள் சிறுநீர் குழாயில் நகர்ந்து வரும் பொழுது நமக்கு பல்வேறு பிரச்சனைகள் மற்றும் வலிகளை ஏற்படுத்துகின்றன.

சிறுநீரக கற்கள் உருவாக மிக முக்கிய காரணம் உப்பு சத்துக்களள் தான். நமது உடலில் போதுமான அளவு கால்சியம் இருக்க வேண்டும். கால்சியம் குறைவாக இருப்பினும் ,அதிகமாக இருப்பினும் பிரச்சனையை ஏற்படுத்தும். கால்சியம் அதிகமாக காணப்பட்டால் அவை கால்சியம் ஆக்சாலேட், கால்சியம் பாஸ்பேட், மற்றும் யூரிக் ஆசிட் போன்ற சிறுநீரக கற்கள் உண்டாக காரணமாக அமைகின்றன.

ஒரு ஒரு குறிப்பிட்ட கால இடைவேளையில் முறையாக தண்ணீர் குடிப்பது அவசியமாகும் . தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் இந்த பிரச்சனை ஏற்படும். தவிர அதிகமான காரம் , உப்பு, புளிப்பு தன்மை கொண்ட உண்வுகளை எடுத்துக் கொள்வதால் இந்த பிரச்சனை உருவாகும்.

அறிகுறிகள்:

சிறுநீரக கற்கள் சிறிய அளவில் காணப்பட்டால் அதாவது 5 mm அளவிற்கும் சிறியதாக இருந்தால் பெரிய அளவில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அதுவே 5 mm க்கும் அதிகமாக இருந்தால் அது கடுமையான பிரச்சனையை உண்டாக்கும் .

ஒரு சிலருக்கு 1cm அளவிற்கு கற்கள் வளர்ந்து சிறுநீரகக் குழாயில் அடைப்பை உண்டாக்கும் .அவ்வாறு கற்கள் உருவாகும் போது இந்த அறிகுறிகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். கிட்னி ஸ்டோன் உண்டானால் முதலில் தாங்க முடியாத அளவிற்கு, இடுப்பு வலி, முதுகு வலி, மற்றும் பிறப்புறுப்பில் வலி ஏற்படும் .

இப்படியான அந்த வலி முதுகில் ஆரம்பித்து பிறப்புறுப்பு வரை சென்று உங்களை தூக்கத்தை கெடுக்கும். தவிர அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தியை உண்டாக்கும். அடர் சிவப்பு நிறம் அல்லது அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீரின் நிறம் இருக்கும். தவிர ஒரு சிலருக்கு சிறுநீரில் ரத்தம் கலந்து வரும்.

ஒரு சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க உணர்வு தோன்றினாலும் சில துளிகள் அதாவது சொட்டு சொட்டாக தான் வெளியேறும் .அப்படி வெளியேறும் பட்சத்தில் அதிக எரிச்சல் மற்றும் வலி ஏற்படும். தவிர குளிர் காய்ச்சல் உண்டாகும்.


வீட்டு வைத்திய முறை:

கிட்னி ஸ்டோன் உள்ளவர்கள் வாழை தண்டு சாறு எடுத்துக் கொள்வதோடு இந்த மூலிகையையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். அந்த மூலிகையானது இரணகள்ளி எனப்படும் செடி . வீடுகளில் அழகிற்காக வளர்க்கப் படும். இதன் இலையை கசக்கினால் அதிலிருந்து வரும் சாறினை அல்லது இலையை எடுத்து வந்தால் வெறும் 7 நாட்களில் சிறுநீரகத்தில் தேங்கியிருக்கும் கற்கள் சிறு சிறு துகள்களாக உடைந்து வெளியேரி விடும்.

இதனை வெறும் வயிற்றில் காலையில் எடுத்துக் கொள்ள வேண்டும். 1 நாளில் நன்கு பிஞ்சு இலையை துடுத்துக் கொண்டு நாளுக்கு நாள் சற்று பெரிய அளவிலான இலையை எடுத்துக் கொண்டே வர வேண்டும். இப்படியாக தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கிட்னி ஸ்டோன் இயற்கையான முறையில் கரைந்து வெளியேற்றப்படுகிறது.

இந்த மூலிகை செடி இல்லாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதன் பொடியை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து அருந்தி வரலாம்.

குறிப்பு: இதனை பின்பற்ற முயல்பவர்கள் அருகிலுள்ள அல்லது உங்களது மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைத்துக் கொள்ள இவைகளை உங்க தட்டுக்குள் சேர்த்துக்கங்க!

Tap to resize

Latest Videos

click me!