எப்போதும் ஒரே மாதிரி அடை சாப்பிட்டு சலித்து போய்டுச்சா!அப்போ 1 தடவ கோதுமை வெஜ் அடை செய்து சாப்பிடுங்க!

By Asianet Tamil  |  First Published Apr 24, 2023, 7:52 AM IST

வாருங்கள்! ஹெல்த்தி ப்ரேக்பாஸ்ட்க்கு சுவையான கோதுமை அடை தோசை ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.


பெரும்பாலானோர் வீட்டில் காலை உணவில் இட்லி,தோசை தான் இடம் பெரும். என்ன தான் இட்லி,தோசை ஆரோக்கியத்திற்கு நல்லது எனினும் தினமும் அதயே செய்து கொடுத்தால் யாராக இருந்தாலும் வெறுத்து போய் தான் சாப்பிடுவார்கள். இப்படி ஒரே மாதிரியாக செய்து தந்தால் சில குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள்.ஆகவே கொஞ்சம் டிஃபரென்ட்டாக இப்படி கோதுமை மாவு வைத்து அடை செய்து பாருங்க. இதில் காய்கறிகளும் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக மற்றும் ஆரோக்கியமான ஒரு உணவு என்றே கூற வேண்டும்.

வாருங்கள்! ஹெல்த்தி ப்ரேக்பாஸ்ட்க்கு சுவையான கோதுமை அடை தோசை ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு- 1 கப்
ரவை- 2 ஸ்பூன்
பச்சரிசி மாவு- 2 ஸ்பூன்
வெங்காயம்- 1
கேரட்- 1
கேப்ஸிகம்-1
தக்காளி- 1
பூண்டு- 4 பற்கள்
இஞ்சி- 1 இன்ச்
காய்ந்த மிளகாய்- 4
கடுகு- 1 ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
கடலை பருப்பு- 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள்-1/2 சிட்டிகை
கறிவேப்பிலை- 1 கொத்து
மல்லித்தழை-கையளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு எடுத்துக் கொண்டு அதனுடன் ரவை, பச்சரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். வெங்காயம்,தக்காளி,கேப்ஸிகம் ,கறிவேப்பிலை மற்றும் மல்லித்தழை ஆகியவற்றை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். கேரட்டினை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில் தோல் உரித்த பூண்டு, இஞ்சி, சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொண்டு அதனை மாவில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் கடுகு, கடலை பருப்பு சேர்த்து தாளித்து விட்டு பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கி விட்டு பின் தக்காளி மற்றும் சிறிது மஞ்சள் தூள் தூவி வதக்கி விட வேண்டும்.

அடுத்தாக துருவிய கேரட் மற்றும் கேப்ஸிகம் சேர்த்து வதக்கி விட்டு இறுதியாக கறிவேப்பிலை மற்றும் மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். இப்போது கரைத்து வைத்துள்ள கோதுமை மாவில் இதனை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து இந்த மாவினை சற்று அடை போன்று இரண்டு பக்கமும் எண்ணெய் ஊற்றி வெந்த பிறகு எடுத்தால் சுவையான,ஹெல்த்தியான கோதுமை அடை ரெடி!

ஈவினிங் ஸ்னாக்ஸிற்கு சூப்பரான முட்டை ஆனியன் பஜ்ஜி! எத்தனை சாப்பிட கொடுத்தாலும் பத்தல என்பார்கள்!

Tap to resize

Latest Videos

click me!