Mushroom: காளானை வெயிலில் வைத்து பிறகு சமைத்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

By Dinesh TG  |  First Published Nov 30, 2022, 10:40 PM IST

கடைகளில் இருந்து வாங்கப்படும் காளான்களில் குறைந்த அளவில் ஒரு சத்துப்பொருள் உள்ளது. காளானை வெயிலில் வைத்து விட்டால், அந்த சத்து அதிகரிக்கும் என்ற விஷயம் இங்கு எத்தனை பேருக்குத் தெரியும். ஆம், உண்மை தான். காளானை வெயிலில் வைத்து பிறகு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்போது காண்போம்.


நம் உடலுக்கு ஊட்டச்சத்தை அளிக்க வல்ல உணவுகளில் காளான் குறிப்பிடத் தகுந்த இடத்தைப் பெற்றுள்ளது. முன்பிருந்ததை காட்டிலும், தற்போது காளான் சாப்பிடும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, பலரும் காளான் வளர்ப்பில் ஈடுபடுவதால், மிக எளிதாக அடித்தட்டு மக்களுக்கும் காளான் கிடைக்கிறது. கடைகளில் இருந்து வாங்கப்படும் காளான்களில் குறைந்த அளவில் ஒரு சத்துப்பொருள் உள்ளது. காளானை வெயிலில் வைத்து விட்டால், அந்த சத்து அதிகரிக்கும் என்ற விஷயம் இங்கு எத்தனை பேருக்குத் தெரியும். ஆம், உண்மை தான். காளானை வெயிலில் வைத்து பிறகு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்போது காண்போம்.

காளான்களில் வைட்டமின் டி 

Latest Videos

undefined

கடைகளில் இருந்து வாங்கி வரப்படும் காளான்களில், எப்போதுமே குறைந்த அளவில் தான் வைட்டமின் டி சத்து இருக்கும். எனவே, சமைப்பதற்கு முன்னதாக காளானை, வெயிலில் வைத்தால் நமக்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். சூரிய ஒளியில் வைட்டமின் டி சத்து அதிகம் நிறைந்துள்ளது என்பதை அனைவரும் அறிந்த ஒன்று தான். காலை நேர வெயிலில் நாம் நின்றால், நம் உடலுக்கு வைட்டமின் டி சத்து கிடைக்கும். அதுபோலவே, காளான்களை சமைப்பதற்கு முன்னதாக, வெயிலில் சிறிது நேரம் வைத்தால் அதிலிருக்கும் வைட்டமின் டி, ஏறக்குறைய 10 மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Hair Shiny: தலைமுடியை பளபளப்பாக வைத்து கொள்ள வாழைப்பழத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க!

வைட்டமின் டி-யின் நன்மைகள்

வைட்டமின் டி, கால்சியம் எனும் சத்துப் பொருளை உடல் உட்கிரகித்தல் அல்லது ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் அவசியமாகும். அதோடு, தசைகள் நன்முறையில் செயல்படவும் வைட்டமின் டி அவசியமாகும்.

மற்றொரு விதத்தில் கூறினால், தேவையான அளவில் வைட்டமின் டி எடுத்துக் கொள்வதால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சில சுவாசப்பாதை தொற்றுகள், சிலவகை நீரிழிவுப் பிரச்சனைகள், சிலவகைப் புற்றுநோய்கள், கல்லீரல் பிரச்சனைகள் மற்றும் சில வயிற்று உபாதைகள் வராமல் தடுக்கப்படுகிறது.

வைட்டமின் டி சத்து நம் உடலில் அதிகரித்தால், பல நன்மைகள் கிடைக்கும் என்பது உறுதி. ஆகவே, இனி எப்போதெல்லாம் நீங்கள் காளான் சமைக்க நினைக்கிறீர்களோ, அப்போதெல்லாம் காளானை சிறிது நேரத்திற்கு வெயிலில் வைத்த பிறகு சமைத்துப் பாருங்கள். இப்படிச் செய்வதால் கூடுதலாக வைட்டமின் டி சத்து கிடைக்கும் என்பதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 

click me!