விந்தணு எண்ணிக்கை குறைவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதனால் குழந்தை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனினும் சில உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் பல ஆண்கள் விந்தணு எண்ணிக்கை குறைவு பிரச்னையை எதிர்கொள்கின்றனர். இது சிறு பிரச்சனையாகத் தோன்றினாலும். ஆனால் இதனுடைய பாதிப்பு பெரியளவில் இருக்கும். இதன்மூலம் ஒரு ஆணுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைந்துபோகிறது. காற்று மாசுபாடு, உடற்பயிற்சியின்மை, சுற்றுச்சூழல் மாசுபாடு, பூச்சிக்கொல்லி எச்சங்கள், புகைபிடித்தல், குடிப்பழக்கம், ஆரோக்கியமற்ற துரித உணவு, ஜங்க் ஃபுட் உள்ளிட்ட பல்வேறு புறக் காரணங்களால் ஆண்கள் விந்தணு உற்பத்தி குறைபாட்டை எதிர்கொள்கின்றனர். இதனால் விந்தணுவின் தரம் குறைந்து, ஆரோக்கியமற்ற எதிர்காலத்தை உருவாக்குகிறது. தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் போன்றவையும் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
விந்தணு
மருந்து சாப்பிடுவதன் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதாலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலமாகவும் விந்தணு குறைபாட்டை நீக்கலாம். மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் இருங்கள், கடுமையான நோய்கள் வராமல் உடலை நன்றாக கவனித்து வாருங்கள், இவற்றுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பின்பற்றுங்கள். இதன்மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
புரத உணவுகள்
முட்டை ஒரு முழுமையான உணவாகும். அதில் உடல்நலனுக்கு தேவையான பல்வேறு புரதங்கள் அடங்கியுள்ளன. அவை விந்தணுக்களை பாதிப்பில் இருந்து மீட்க உதவுகிறது. மேலும் விந்தணுக்கள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது. அதேபோன்று கீரையும் ஒரு முழுமையான ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவாகவே கருதப்படுகிறது. கீரையில் ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இந்த ஃபோலிக் அமிலம் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், விந்து ஆரோக்கியமாக இருப்பதற்கும் பெரிதும் உதவுகிறது.
வாழைப்பழம்
பழ வகைகளில் வாழைப்பழத்துக்கு விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு. இதை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், உடலில் விந்தணு உற்பத்தி சுறுசுறுப்பாக இருக்கும். இப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற முக்கிய ஊட்டச்சத்து உணவுகள் உள்ளன. அதனுடன் ஃப்ரோமெலைன் என்கிற நொதியும் காணப்படுகிறது. இது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் விந்தணுக்களின் தரத்தையும் மேம்படுத்துகிறது.
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்கும் பைட்டோஸ்டெரால்கள் என்கிற பொருள், அதில் நிறைந்து காணப்படுகின்றன. இந்த விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன. இவை விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. மேலும் பூசணி விதைகளை உரிய முறையில், நம் உணவுப் பழக்கத்தில் சேர்த்து வருவதன் மூலம் ரத்தம் ஓட்டம் அதிகரிக்கிறது.
வீட்டில் யாரும் இல்லாத போது பெண்கள் செய்ய விரும்புவது இதுதான்..!!
மாதுளை
மாதுளை நமது உடலில் இரத்தத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் துணை புரிகிறது. மேலும் அவ்வப்போது மாதுளைப் பழத்தை சாப்பிடுவதன் மூலம் விந்தணுக்களின் தரமும் மேம்படுகின்றன. இந்த விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அதனால் விந்தணுக்களின் வளர்ச்சியில் சேதம் ஏற்படுவதை தடுக்கின்றன.
மேலே கூறப்பட்ட உணவுகள் மட்டுமில்லாமல், நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய தக்காளிகளிலும் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான அம்சங்கள் உள்ளன. தக்காளியில் லைகோபீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டும் உள்ளது. இது கருவுறுதலை அதிகரிக்க மிகவும் உதவுகிறது. அதேபோன்று கருவுறாமை பிரச்சனையை குறைக்க டார்க் சாக்லேட்டுகளும் உதவுகின்றன. எல்-அர்ஜினைன் எச்.சி.எல் என்ற அமினோ அமிலம், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மேலும் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துகிறது.