உடலுறவு முடிந்தவுடன் நமக்கு ஏற்படும் மனநிலையை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் தான், ஒருவருடைய முதிர்ச்சி உள்ளது. கலவி முடிந்த பின், துணையுடன் நாம் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் திருமணம் அல்லது காதல் வாழ்க்கையை வெற்றிக்கரமாக மாற்றுகிறது.
ஒவ்வொரு நபரின் உணர்ச்சி நிலையோடு தொடர்புடையது தான் உடலுறவு. இது ஒவ்வொரு நபருக்கும் தேவையான உணர்வு நிலையாகவே உள்ளது. இதுதொடர்பான ஒவ்வொரு உணர்வு சார்ந்த நடவடிக்கைகளும் வெளிப்படையாக விவாதிக்கப்பட வேண்டும், இதுகுறித்து ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் அவசியமாக செய்யப்பட வேண்டிய ஒன்று. அதில் உடலுறவுக்குப் பிந்தைய நேரமும் முக்கிய பகுதியாகும். ஒருவேளை உங்களுக்கும் உங்களுடைய துணைக்கும் கலவி முடிந்தவுடன் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தமிடும் பழக்கம் இருந்தால், அது மிகவும் ஆரோக்கியமான தாம்பத்தியமாக கருதப்படுகிறது.
காதல் ஹார்மோன்
ஆக்ஸிடாஸின் என்பது காதல் ஹார்மோனாக குறிப்பிடப்படுகிறது. உடலுறவுக்குப் பிறகும் தம்பதிகள் ஒருவரையொருவர் அரவணைத்துச் செல்வது அதிக ஆக்ஸிடாக்ஸின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இதன்மூலம் உறவு வலுபெறுகிறது. காதல் சார்ந்த மனநிலை மேம்படுகிறது. மேலும் இதன்மூலம் உடல்நிலையும் ஆரோக்கியமாக இருக்கும்
இருதயம் நலன் பெறுகிறது
ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பதால் ரத்த அழுத்தம் பிரச்னை குறையும். இதை தொடர்ந்து செய்து வந்தால், இருவரில் யாருக்காது இருதய நோய் ஆபத்து இருந்தால் அதுவும் குறையும். ஆரோக்கியமான வகையில் உடலுறவு கொள்ளும் தம்பதிகள் நீண்டகாலம் எந்தவிதமான உடல் உபாதைகள் இல்லாமல் வாழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மன அழுத்தம் வராது
இன்றைய பரபரப்பான உலகில் பெரும்பாலானோருக்கு இருக்கக்கூடிய பிரச்னை மன அழுத்தம் தான். ஒருவருக்கொருவர் அரவணைப்பது இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் பாதுகாக்கிரது. உடலுறவுக்குப் பிறகு தொடர்ந்து துணையுடன் அரவணைக்கும் பழக்கம் உள்ளவர்கள் மன அழுத்தத்தை நல்ல முறையில் குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். மன அழுத்தம் மற்றும் பதற்றம் உள்ளவர்களுக்கும் இது நல்லது. ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லவும் உதவுகிறது.
நோய் அச்சம் இருக்காது
அடுக்கடுக்காக நோய் அபாயம் ஏற்படும் இக்காலத்தில், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக கொண்டவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு குடும்பத்தினர் மற்றும் அன்பானவர்களின் அரவணைப்பும் முக்கியமாக தேவைப்படுகிறது. அதனால் உங்களுடைய துணைக்கு தேவைப்படும் நேரத்தில் நீங்கள் கட்டிப்பிடி வைத்தியம் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் ஆக்சிடாக்ஸின் ஹார்மோன் அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
பெண்களை விட ஆண்களுக்கு அதிகளவில் பிரேக் - அப் நடப்பது ஏன்?
தாம்பத்தியத்தில் நெருக்கம்
உடலுறவுக்குப் பிறகு ஒருவரையொருவர் கட்டிப்பிடிக்கும் பழக்கத்தால் தம்பத்திகள் அதிக நெருக்கத்துடன் இருப்பார்கள். ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொண்டு இனிய இல்லறத்தை பேணுவார்கள். அவர்களுடைய குழந்தைகளும் நல்ல பண்புகளுடன் வளர்க்கப்படுவார்கள். அவர்கள் மூலம் அவர்களுடைய நண்பர்களுக்கும் நல்ல பண்புகள் போய் சேரும்.