தம்பதிகள் நிர்வாணமாக தூங்குவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்..!!

By Dinesh TG  |  First Published Nov 27, 2022, 12:07 PM IST

தலைப்பை படித்துப் பார்த்தவர்களுக்கு இது மிகவும் ஆச்சரியமாகத் தோன்றலாம். ஆனால் இதில் பல்வேறு நன்மைகள் இருக்கிறது என்பதே உண்மை. குறிப்பாக, தம்பதிகள் நிர்வாணமாக தூங்குவதன் மூலம் ஒருவர் மீது இன்னொருவருக்கு அன்பு அதிகரிக்கும்.
 


ஒருவர் இரவில் நன்றாக தூங்குவது மிகவும் முக்கியம். அப்போது தான் உடலும் மனதும் ஆரோக்கியம் பெறுகிறது. நீங்கள் உறங்கும் போது, உங்களை யாரும் கவனிக்கப்போவது கிடையாது. அப்படியிருக்க, எதற்காக ஆடையுடன் தூங்குகிறோம் என்று எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா? இந்த கேள்வி உங்களுக்குள் ஒரு சிறு பொறியைக் கொண்டுவந்தால், உடனே முயற்சித்து பாருங்கள். ஆனால் ஆடையின்றி தூங்கும் போது, தனியாக படுக்கச் செல்லுங்கள். அப்போதுதான் அவர்களுக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது. ஆடையில்லாமல் உறங்குவதன் மூலம் உடலுக்கு முழுமையான ஓய்வு கிடைக்கிறது, மன அழுத்தம் குறைகிறது, எடை மிகவும் குறைகிறது. குறிப்பாக தம்பதிகள் ஆடையில்லாமல் தூங்குவதன் மூலம், பல்வேறு அற்புத நன்மைகளை பெறுகின்றனர்.

பரஸ்பர நெருக்கம்

Tap to resize

Latest Videos

undefined

தம்பதிகள் நிர்வாணமாக தூங்கும்போது, அவர்களுக்கிடையேயான அன்பின் ஆழமும் நெருக்கமும் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும், பெண்கள் தங்களுடைய துணையுடன் இப்படித்தான் தூங்க விரும்புகிறார்களாம். இதன்மூலம் திருமண பந்தம் வலிமை அடைவதாக பெண்கள் கருத்து கூறியுள்ளனர்.

காதல் ஹார்மோன் 

உங்கள் துணையுடன் நிர்வாணமாக தூங்குவது மன அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் உடலில் ஏற்படும் பதட்டமும் குறைகிறது. அதனால் உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கிறது. தம்பதிகளுக்கு இடையே உருவாகும் நெருக்கம் காதல் ஹார்மோனான ஆக்ஸிடாஸின் அளவை அதிகரிக்கிறது. இதனால் தம்பதிகளுக்கிடையில் என்றும் தாம்பத்யம் சிறக்கிறது.

வலிமையான பந்தம்

தம்பதிகள் இரவு நிர்வாணமாக தூங்குவதன் மூலம், இருவருக்குமிடையேயான உறவு வலுப்படுகிறது. திருமணமான புதிதில் இருந்தது போன்ற காதல் உணர்வு, அவர்களுக்கிடையில் நீக்கமற நிறைந்திருக்கும். இதற்கு காதல் ஹார்மோன் மூலம் ஏற்படும் உணர்ச்சிப் பிணைப்பு காரணமாக இருக்கலாம். வலுவான தாம்பத்யம் கொண்ட நீண்ட கால இணையர்களிடம் ஆக்ஸிடாக்சின் அளவு அதிகரித்துக் காணப்படுகிறது.

நீங்கள் அந்த நேரத்தில் மட்டும் ‘அதைச்’ செய்யக்கூடாது- மீறினால் அவ்வளவுதான்..!!

குழந்தைப் பேறு

ஆண்மைக் குறைபாடு, விந்தணு குறைபாடு போன்ற பிரச்னையைக் கொண்ட ஆண்கள் நிர்வாணமாக தூங்குவது அவர்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உள்ளாடையின்றி உறங்குவது விரைகளை குளிர்விக்கும். இதன்மூலம் இறுக்கமான மூலக்கூறு தளர்ந்து விந்தணுக்களின் செறிவை அதிகரிக்கும். 

எடை இழப்பு சாத்தியம்

ஒரு இரவில் 5 மணிநேரம் அல்லது அதற்கும் குறைவாக தூங்கும் பெரியவர்கள் 7 மணிநேரம் அல்லது அதற்கு மேல் தூங்குபவர்களை விட கணிசமான அளவு எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் நிர்வாணமாக தூங்குவதன் மூலம் நீண்டநேரம் நன்றாக தூங்குவது, உடல் பருமன் மற்றும் எடை அதிகரிப்பு அபாயத்தை குறைக்கிறது. 
 

click me!