பெண்களை விட ஆண்களுக்கு அதிகளவில் பிரேக் - அப் நடப்பது ஏன்?

By Dinesh TG  |  First Published Nov 23, 2022, 4:53 PM IST

பெண்களை விட ஆண்கள் தான் அதிகளவில் பிரேக்-அப் பிரச்னையை சந்திக்கின்றனர். இதற்கு அவர்களுடைய நடத்தையும் ஒரு காரணமாக உள்ளது. இன்னும் இதுகுறித்த தகவல்களை விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
 


ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் காதல் எப்போதாவது வந்து போவதுண்டு. அதில் பலருக்கும் நிலைத்து நிற்கும். ஒருசிலருக்கு காதல் ஒரு காட்டு காட்டுவிட்டு போகும். எனினும் காதலிக்கும் ஆண்களை விட பெண்கள், காதலில் வெற்றி அடைகின்றனர். காதல் தோல்வி அதிகமாக சந்திப்பது ஆண்கள் தான். அதுவும் அந்த காதலை முறித்துக்கொள்ளும் முடிவை ஆண்களை விடவும் பெண்கள் தான் அதிகம் எடுக்கின்றனர். இந்நிலையில் ஆண்களுடைய காதல் ஏன் பிரேக்-அப் முடிவது அதிகமாக உள்ளது என்பது குறித்த காரணத்தை விரிவாக தெரிந்துகொள்வோம்.

காதலில் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் அவ்வப்போது பாராட்டு தேவைப்படுகிறது. ஆனால் அது கிடைக்காமல் போகும் போது ஆண்கள் ஏமாற்றம் அடைகின்றனர். இதனால் சின்ன சின்ன பிரச்னைகள் ஏற்பட்டு, முடிவில் அதில் பிரேக்-அப் வரை சென்றுவிடுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் பெண்கள் பிரேக்-அப் முடிவை எடுத்துவிடுகின்றனர். அதற்கு ஆண்களே அதிகமானோர் காரணமாக உள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

இந்த உறவில் இவருடன் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை, குறிப்பிட்ட ஆணுடன் இருப்பதில் எந்த தகுதியும் இல்லை என்று ஒரு பெண் முடிவு செய்யும் போது, அங்கு பிரேக்- அப் ஏற்படுகிறது. இதற்கு, காதலியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத ஆணின் இயலாமை தான் காரணமாக முன்வைக்கப்படுகிறது. காதலர்களுக்கிடையே நெருக்கம் குறையும் போது, அதுதொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஏற்படு பிரிவு ஏற்படுகின்றன.

இதுபோன்ற விஷயங்களில் ஆண்கள் தான் பிரேக்-அப் முடிவை எடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தம்பதிகளுக்கு இடையேயான உறவு நன்றாக இருக்க வேண்டும். அதில் அவர்களுடைய பாலியல் வாழ்க்கையும் அடங்கும். ரொமான்ஸ், செக்ஸ் லைஃப் சரியில்லை என்ற போதும் அது பிரேக்-அப்புக்கு வழிவகுக்கிறது.

நீங்கள் அந்த நேரத்தில் மட்டும் ‘அதைச்’ செய்யக்கூடாது- மீறினால் அவ்வளவுதான்..!!

எந்த ஒரு உறவும் நீடிக்க இருவருக்குமிடையேயான நம்பிக்கை மிகவும் முக்கியம். அந்த நம்பிக்கையை இழந்து ஏமாற்றும் துணையுடன் யாரும் இருக்க விரும்பமாட்டார்கள். தங்களை ஏமாற்றிய ஒருவருடன் ஆண்கள் பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆண்கள் பெரும்பாலும் தங்கள் துணையிடமிருந்து மரியாதையை விரும்புகிறார்கள்.

அது கிடைக்காத போது பிரேக்-அப் ஏற்படுகிறது. முந்தைய பிரேக்-அப் சம்பவங்களுக்கு பிறகு காதலர்கள் இணைய அதிக வாய்ப்புள்ளது. ஆனால் மரியாதை குறைந்த இடத்தில் ஏற்படும் பிரிவுகள் மீண்டும் சேருவது கிடையாது. குறிப்பாக பெண்களே மீண்டும் சேர முயற்சித்தாலும், ஆண்கள் சேருவது கிடையாது. 

எல்லாவற்றிலும் தங்களைக் கட்டுப்படுத்தும் துணையை ஆண்கள் வெறுக்கின்றனர். அவர்கள் எல்லாவற்றிலும் தங்களைக் கட்டுப்படுத்த விரும்பினால், ஆண்கள் அடிக்கடி பிரிந்து செல்வார்கள். ஆனால் இதனால் பிரியும் காதலர்கள் மீண்டும் ஒன்று சேருவதும் அதிகமாக உள்ளது.

click me!