Rice Foods: அரிசி உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா?

By Dinesh TG  |  First Published Dec 15, 2022, 7:02 PM IST

தொடர்ந்து அரிசி உணவைச் சாப்பிடுவதால் ஏதேனும் பாதிப்புகள் உண்டாகுமா என்ற சந்தேகம் பலரது மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. எதையும் அளவோடு சாப்பிட்டால் தான் நல்லது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகி விடும் என்பதை நாம் மறக்க கூடாது.


இன்றைய காலகட்டத்தில் தினசரி நாம் உட்கொள்ளும் மிக முக்கிய உணவாக இருப்பது அரிசி உணவு தான். காலையில் இட்லி, தோசை மற்றும் இடியாப்பம் என நாம் சாப்பிடும் சிற்றுண்டியும் அரிசி உணவாகத் தான் இருக்கிறது. மதிய வேளையில் சாப்பிடும் உணவும் பெரும்பாலும் அரிசி உணவு தான். இப்படி நாம், தொடர்ந்து அரிசி உணவைச் சாப்பிடுவதால் ஏதேனும் பாதிப்புகள் உண்டாகுமா என்ற சந்தேகம் பலரது மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. எதையும் அளவோடு சாப்பிட்டால் தான் நல்லது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகி விடும் என்பதை நாம் மறக்க கூடாது.

அரிசி உணவு

Tap to resize

Latest Videos

அரிசி உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் மற்றும் உடலில் சர்க்கரையின் அளவு கூடி விடும் எனப் பரவலாக கூறப்பட்டு வருகின்றது. ஏனெனில் இதற்கு மிக முக்கிய காரணம், அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகளவில் இருப்பது தான். அதற்காக, அரிசியை நாம் முற்றிலுமாக தவிர்ப்பதும் கண்டிப்பாக ஆரோக்கியமானது அல்ல.

ப்ரீபயாட்டிக் தானியம்

அரிசியில் தயாரிக்கப்படும் சுவையான உணவு மற்றும் நம் எல்லோருக்கும் மிகவும் பழக்கமான உணவு என்பதையும் கடந்து, அரிசியில் பல விதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அரிசி ஒரு ப்ரீபயாட்டிக் தானியம் ஆகும். அரிசி உணவுகள் என்பது நமக்கான உணவாக மட்டுமல்லாமல், உடலில் இருக்கும் நல்ல நுண்ணுயிரிகளுக்கும் முக்கிய உணவாக அமைகிறது.

காரசாரமான சிக்கன் சுக்கா ! செய்த அடுத்த நிமிடத்தில் காலி ஆகி விடும்.

செரிமானம்

  • அரிசி உணவுகளை நாம் சாப்பிடுவதால், அடிக்கடி பசி எடுக்கும் உணர்வு என்பது ஏற்படாது. இதன் காரணமாக தேவையில்லாத திண்பண்டங்கள் மற்றும் பொறித்த உணவுகள் சாப்பிடுவதை நம்மால் தவிர்க்க முடியும்.
  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் அரிசி சாதம் மிக எளிதாக செரிமானம் அடையும்.
  • அரிசி சாதத்தில் இரவு நேரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு, மறுநாள் காலையில் சாப்பிட்டு வந்தால், அதன் மூலம் ஏராளமான பல ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைப்பது மட்டுமின்றி, உடலும் குளிர்ச்சியாகும்.
  • அரிசியின் ஒவ்வொரு பகுதியும் பயன்படுத்தக் கூடியது தான். இதன் தவிடு கூட கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கப்படுகிறது. அரிசி உணவுகளை நாம் தொடர்ந்து சாப்பிட்டால், பல நன்மைகள் கிடைக்கும். இருந்தாலும், அரிசியை மட்டுமே உண்பதை தவிர்த்து விட்டு பல விதமான தானியங்களையும் நாம் உண்ண வேண்டும். சிறுதானியங்களை நாம் அடிக்கடி எடுத்துக் கொண்டால் இன்னும் பல கூடுதல் நன்மைகளையும் பெற முடியும்.
click me!