Hot Bath: வெந்நீர்க் குளியல் ஆரோக்கியமா? ஆபத்தா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

By Dinesh TG  |  First Published Dec 15, 2022, 6:54 PM IST

வெந்நீரில் தினந்தோறும் தொடர்ச்சியாக குளிப்பது ஆபத்தை ஏற்படுத்துமா என பலருக்கும் சந்தேகம் உள்ளது. உங்களுக்கே இந்த சந்தேகம் இருந்தால், இந்தப் பதிவின் முடிவில் அதற்குத் தீர்வு கிடைக்கும். 


தினந்தோறும் காலையில் குளிப்பது உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். இன்றைய காலகட்டத்தில் பலரும் குளிர்ந்த நீரைக் காட்டிலும், சூடான வெந்நீரில் குளிக்கவே அதிக அளவில் விரும்புகின்றனர். இவ்வாறு வெந்நீரில் தினந்தோறும் தொடர்ச்சியாக குளிப்பது ஆபத்தை ஏற்படுத்துமா என பலருக்கும் சந்தேகம் உள்ளது. உங்களுக்கே இந்த சந்தேகம் இருந்தால், இந்தப் பதிவின் முடிவில் அதற்குத் தீர்வு கிடைக்கும். இப்போது தினசரி வெந்நீரில் குளிப்பது ஆரோக்கியமா அல்லது ஆபத்தா என்பதை விரிவாக பார்ப்போம்.

வெந்நீர் குளியல் ஆபத்தா?

Tap to resize

Latest Videos

மழைக்காலம் மற்றும் பனிக்காலம் போன்ற குளிரான காலங்களில் வெந்நீரில் குளிப்பது தான் சிறந்தது. அதிலும் அதிகம் சூடாக உள்ள தண்ணீரை விடவும் வெதுவெதுப்பான தண்ணீரிலே குளிக்கலாம். அதுவே, உடலுக்கு நல்லது. மேலும், குளிர் காலங்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும்.

கோடை காலங்களில் சொல்லவே வேண்டாம். அனைவருமே பச்சைத் தண்ணீரில் குளிப்பார்கள். கோடை வெப்பத்தில் ஏற்கனவே தண்ணீர் சூடாகத் தான் இருக்கும். ஆகவே, கோடை காலத்தில் வெந்நீர்க் குளியலை பெரும்பாலும் யாரும் விரும்ப மாட்டார்கள்.

சைனஸ், மூக்கடைப்பு மற்றும் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், சுக்கு தைலத்தை தண்ணீரில் கலந்தும் குளிக்கலாம். இதுதவிர, தலையில் அப்படியே வெந்நீரை ஊற்றிக் குளிப்பது மிகவும் தவறான செயலாகும். காரணம் என்னவெனில் தலையில் வெந்நீரை ஊற்றிக் குளிப்பதால், நம் உடலை விட்டு வெப்பம் வெளியேற முடியாமல், உள்ளேயே இருக்கும். இது உடலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடும்.

Nerves: நரம்புகள் வலுப்பெற உதவும் சைவ உணவுகள் இவை தான்!

குளிக்கும் முறை

குளிக்கும் போது வெந்நீரை முதலில் காலில் ஊற்றி விட்டு, பின்னர் முழங்கால், இடுப்பு மற்றும் நெஞ்சுப் பகுதி என ஊற்ற வேண்டும். அதன் பிறகு, இறுதியாக தலைக்கு தண்ணீரை ஊற்ற வேண்டும். இவ்வாறு தண்ணீரை ஊற்றி குளித்தால், சீரான முறையில் உடலில் இருந்து வெப்பம் வெளியேறி விடும்.

மழை மற்றும் குளிர் காலங்களில் காய்ச்சல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகளால்  பாதிக்கப்பட்டவர்கள் தலைக்கு குளிப்பதை தவிர்த்து விடுவது தான் மிகவும் நல்லது.

பொதுவாகவே, சாப்பிட்ட பிறகு குளிக்க கூடாது என்பதை அனைவரும் அறிவர். இப்படிச் செய்தால் செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதே இதன் காரணம். மேலும், குளிர் காலங்களில் செரிமானம் தாமதமாகவே நடக்கும் என்பதால், உணவிற்கு பிறகு, குளித்தால் அது செரிமானத்தினை மட்டுப்படுத்தி விடும்.

click me!