எப்படியாவது உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என நினைப்பதுண்டு. இதற்காக பல முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். அவ்வகையில் உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற மற்றும் மிகவும் அவசியமான சில டிப்ஸ்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் உடல் எடையினை குறைப்பதற்குத் தான் பலரும் வழி தேடிக் கொண்டிருக்கின்றனர். அதற்காக அவர்கள் பலவித முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஆனால், உடல் எடையை அதிகரிப்பதற்காகவும் சிலர் வழி தேடி வருகின்றனர். பொதுவாகவே சிலர் மிகவும் ஒல்லியான தேகத்தை கொண்டிருப்பர். இவர்களை கண்டு பலரும் ஏளனம் கூட செய்வார்கள். அப்படிப்பட்ட நபர்கள், எப்படியாவது உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என நினைப்பதுண்டு. இதற்காக பல முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். அவ்வகையில் உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற மற்றும் மிகவும் அவசியமான சில டிப்ஸ்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
உடல் எடையை அதிகரிக்க
தங்களது உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் சர்க்கரைச் சத்து அதிகளவு நிறைந்த உணவுகளையும், கொழுப்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டியது அவசியம். ஏனெனில், உடல் எடையை அதிகரிப்பதற்காக எதை வேண்டுமானாலும் சாப்பிடக் கூடாது. பின்னாளில் அது நமக்கே பிரச்சனையாகி விடும். உடல் எடையை கூட்டுவதால், ஆரோக்கியத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் மிக அவசியம்.
புரதச்சத்து அதிகம் நிறைந்த உணவுகனை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக, முட்டையின் உள்ளிருக்கும் வெள்ளைப் பகுதி மிகவும் சிறந்தது. ஆனால், மஞ்சள் கருவில் கொழுப்புச்சத்து அதிகமாக உள்ளதால் அதனை தவிர்ப்பது நலமாக இருக்கும்.
Onion Chutney: சிறுநீரகப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் வெங்காய சட்னி: எப்படி செய்வது?
வாழைப்பழம், திராட்சை, பாதாம், வால்நட்ஸ் மற்றும் பேரீச்சம்பழம் போன்றவற்றை சாப்பிட்டு ஊட்டச்சத்து குறைபாடுகளையும் சரி செய்ய வேண்டும்.
அதிகமாக வேலை செய்யும் சில நபர்கள், உணவில் சரியான கலோரி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால், அவர்களுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்காமல் போய்விடும். இவ்வாறு கலோரி குறைந்த உணவுகளை சாப்பிடுவதாலும் உடல் எடை குறையும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
மருத்துவர்களின் பரிந்துரைப் படி புரோட்டின் நிறைந்த பானங்களை அருந்தலாம். மேலும், குறைவான கொழுப்புச்சத்து நிறைந்த பால் அருந்துவதோடு, வாரத்திற்கு 3 நாட்கள் மீன் உணவு சாப்பிடுவது மிகவும் நல்லது.
நம்மில் பலரும் சரியான உடல் உழைப்பு இல்லை எனில், உடல் எடை அதிகரித்து விடும் என்ற எண்ணத்தினை வைத்துள்ளனர். ஆனால், இந்த எண்ணம் தவறானது என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் உடற்பயிற்சி செய்வது மற்றும் ஜிம்மிற்கு செல்வது போன்ற பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.