Tea Day : மஞ்சள் டீ முதல் மிளகு டீ வரை- எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் தேநீர் பானங்கள்..!!

By Dinesh TG  |  First Published Dec 15, 2022, 10:58 AM IST

சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு, வீட்டிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான தேநீர் தயாரிக்கும் எளிய வழிமுறைகளை குறித்து விரிவாக பார்க்கலாம்.
 


ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச தேயிலை தினம் உலகம் முழுவதும், குறிப்பாக தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் கொண்டாடப்படுகிறது. உலகளவில் தேயிலை தயாரிப்பில் பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, கென்யா, மலாவி, மலேசியா, உகாண்டா, இந்தியா மற்றும் தான்சானியா உள்ளிட்ட நாடுகள் முதன்மையான இடங்களில் உள்ளன. குறிப்பிட்ட இந்நாடுகள் டிசம்பர் 15-ம் தேதிய சர்வதேச தேயிலை நாளாக அறிவித்துள்ளன. இந்த நாளில், தேயிலையின் கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் அது எப்படி உலகம் முழுவதும் விரும்பப்படும் பானமாக மாறியது என்பது பற்றி மக்களுக்கு கூறப்பட்டு வருகின்றன. இந்நாளில் தேயிலை உற்பத்தியை அதிகரிக்கவும், தேயிலை தொழிலாளர்களுக்கு சமமான ஊதியத்தை உருவாக்கவும் அரசாங்கம் முன்முயற்சிகளை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன.

குளிர்காலத்தில் தேநீரை விரும்பி குடிப்போரின் எண்ணிக்கை அதிகம். இதன்மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. மேலும் குளிர் காலங்களில் நமக்கு தேவையான வெப்பத்தை உணரவும் உதவுகிறது. சில வகையான தேநீர் மிகவும் ஆரோக்கியமானது - மஞ்சள் தேநீர் முதல் இஞ்சி டீ வரை தயாரிக்கப்படும் தேநீர்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் அதிகளவில் உள்ளது. 

Tap to resize

Latest Videos

தூங்கும் போது தொண்டை வறண்டு போகிறதா? இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்..!!

மஞ்சள் தேநீர்

நமது இந்தியாவுக்கு மஞ்சள் முக்கியமான பொருளாகும். ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியத்திலும் மஞ்சளுக்கு தனி இடம் உண்டு. அதை வைத்து தயாரிக்கப்படும் தேநீரில், உடலுக்கு போதுமான ஆரோக்கியம் கிடைக்கிறது. நன்றாக தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் தேநீர் தூள் போட்டு ஆறவிடவும். அதை வடிகட்டி, அதில் 2 தேக்கரண்டி அரைத்த மஞ்சள், அரை தேக்கரண்டி நறுக்கிய இஞ்சிகளை போடவும். பிறகு ஒரு பட்டை, எலுமிச்சை தோல், 4 டீஸ்பூன் தேன் விட்டு கலக்கவும். இப்படி செய்தால் சுவையான மஞ்சள் தேநீர் தயார். 

மசாலா தேநீர்

இந்தியாவின் மிகபிரபலமான தேநீர்களில் ஒன்று மசாலா டீ. அதற்கு 15 ஏலக்காய், 5 கிராம்பு, 5 மிளகு, 1 பட்டை, ஒரு சிறியளவு காய்ந்த ஏலக்காய், 1 டீஸ்பூன் குங்கப்பூ, 3 ரோஜா இதழ்கள், அரை டீஸ்பூன் இஞ்சிப் பொடி ஆகியற்றை காயவைத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். 

4 கப் தண்ணீர் ஊற்றி அதில் 4 ஸ்பூன் தேயிலை, 4 ஸ்புன் சக்கரை, 2 கப் பால், தயாரித்த மசாலாவில் முக்கால் ஸ்பூன் போட்டு நன்றாக கொதிக்க விடவும். இப்படி செய்தால் எடுத்தால் மசாலா தேநீர் தயார். முடிந்தவரை இதை சூடாகவே குடித்துவிடுங்கள். அப்போது தான், இதிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள் உடனடியாக கிடைக்கும்.

மிளகு தேநீர்

மசாலா டீ போன்று மிளகு டீ-யும் நன்றாக காரம் சாரமாக இருக்கும். இதற்கு தேவையான பொருட்கள் 2 கப் தண்ணீர், 1 டீஸ்பூன் மிளகு தூள், 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, 1 இஞ்ச் இஞ்சி ஆகியவையாகும். ஒரு பேனை சுட வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். முன்னதாக மிளகு தூள் மற்றும் இஞ்சியை அதில் போட வேண்டும். அது நன்றாக வெந்தவுடன் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கிவிட வேண்டும். 

தொடர்ந்து அதை வடிகட்டு, அதில் தேன் கலந்து சாப்பிட்டால் சூடான மிளகு டீ ரெடி. இதற்கு தேயிலை தேவையில்லை. மிளகும் இஞ்சியின் காரமுமே போதுமானது. குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமலுக்கு இது அற்புதமான பானம். ஆனால் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம்.

click me!